திரிணாமுல் காங்கிரஸில் மம்தாவின் மருமகனுக்கு நம்பர்-2 பதவி... கலக்கத்தில் சீனியர்கள்!

அபிஷேக்குடன் மம்தா பானர்ஜி

நந்திகிராம் தொகுதியில் மம்தாவை வீழ்த்திய சுவேந்து அதிகாரி சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலக காரணமாக இருந்தவரும் அபிஷேக் பானர்ஜி தான்

  • Share this:
திரிணாமுல் காங்கிரஸில் மம்தா பானர்ஜி வாரிசு அரசியல் நடத்துவதாக குற்றம்சாட்டி சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பல சீனியர்கள் கட்சியிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது, மம்தா அவரின் மருமகன் அபிஷேக் பானர்ஜிக்கு கட்சியில் உயர் பதவியை அளித்திருப்பது சீனியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடைபெற்று முடிந்த மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களுக்கும் மேல் வென்று 3வது முறையாக மாநிலத்தில் ஆட்சியை பிடித்திருக்கிறது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

தேர்தலுக்கு பின்னர் கட்சியை பலப்படுத்தும் வகையில் காணொளி காட்சி மூலமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் மம்தா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள், மூத்த தலைவர்கள் உள்ளிட்டோருடன் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மம்தா, திரிணாமுல் காங்கிரஸில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டுவந்தார். அதில் முக்கியமானதாக 33 வயதே ஆன அவருடைய மருமகன் அபிஷேக் பானர்ஜியை, (மம்தாவின் சகோதரர் அமித் பானர்ஜியின் மகன்) திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக்கினார்.

Also Read:    கர்நாடக அரசின் சின்னம், கொடி கலரில் பிகினி உடை: கூகுளுக்கு பிறகு கர்நாடகாவை அவமதித்த அமேசான்!

இதன் மூலம் மம்தா பானர்ஜிக்கு அடுத்தபடியாக கட்சியில் வலிமையான இரண்டாவது பொறுப்புக்கு அபிஷேக் முன்னேறியுள்ளார்.

அபிஷேக் பானர்ஜி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸின் வெற்றியில் முக்கிய பங்காற்றியதுடன், திரிணாமுல் காங்கிரஸுக்காக பிரசாந்த் கிஷோரை தேர்தல் வியூக நிபுணராக்கியதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தேசிய அளவில் விரிவுபடுத்துவதும், அமைப்பு ரீதியாக அக்கட்சியை பலப்படுத்துவதும் அபிஷேக் பானர்ஜியின் தலைமைப் பணியாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Also Read:   மலையாளம் பேசும் செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கை - டெல்லி அரசு மருத்துவமனை எச்சரிக்கை!

நந்திகிராம் தொகுதியில் மம்தாவை வீழ்த்திய சுவேந்து அதிகாரி சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலக காரணமாக இருந்தவரும் அபிஷேக் பானர்ஜி தான். அவருக்கு கட்சியில் அளிக்கப்பட்ட முக்கியத்துவம் கருதி, சீனியர்கள் ஓரங்கட்டப்படுவதாக கூறி அக்கட்சியிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்து தற்போது சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ஆகியிருக்கிறார்.

கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் அபிஷேக் பானர்ஜி, மாநில இளைஞர் அணி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக நடிகை சாயோனி கோஷ் இளைஞரணித் தலைவர் ஆக்கப்பட்டுள்ளார்.

Also Read:   அந்த 302 அதிர்ஷ்டசாலிகளுள் நானும் ஒருவன் என்பது மிகவும் ஸ்பெஷல் - மனம் திறந்த தினேஷ் கார்த்திக்!

இதே போல மகளிர் அணி தலைவராக எம்.பி காகோலி கோஷ் தஸ்திதார். விவசாய அணி தலைவராக புர்னேந்து போஸ், கலாச்சார பிரிவு தலைவராக ராஜ் சக்கரபோர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.
Published by:Arun
First published: