ரகசியத்தை கசியவிட்டாரா அபிநந்தன்? தொடரும் விசாரணை...

பாகிஸ்தானை அபிநந்தன் பாராட்டி பேசும் வீடியோவில் பத்துக்கும் மேற்பட்ட இடங்கள் எடிட் செய்யப்பட்டதன் பின்னணி குறித்தும், அவரிடம் வாக்குமூலம் மிரட்டி வாங்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரிக்கப்படவுள்ளது.

ரகசியத்தை கசியவிட்டாரா அபிநந்தன்? தொடரும் விசாரணை...
அபிநந்தன்
  • News18
  • Last Updated: March 3, 2019, 1:01 PM IST
  • Share this:
பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி மீண்ட விங் கமாண்டர் அபிநந்தனுக்கு  உடல் பரிசோதனையும், உளவியல் பரிசோதனையும் தொடர்ந்து நடைபெறுகிறது. 

பாகிஸ்தானில் இருந்து மீண்டுவந்த விங் கமாண்டர் அபிநந்தனுக்கு டெல்லி ராணுவ மருத்துவமனையில் நேற்று மருத்துவ பரிசோதனை நடந்தது. அபிநந்தன் உடலில் பாகிஸ்தான் ராணுவம் உளவு பார்க்கும் கருவியை பொருத்தியிருக்கலாம் என்ற கோணத்திலும் ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது.

மேலும், பாகிஸ்தானை அபிநந்தன் பாராட்டி பேசும் வீடியோவில் பத்துக்கும் மேற்பட்ட இடங்கள் எடிட் செய்யப்பட்டதன் பின்னணி குறித்தும், அவரிடம் வாக்குமூலம் மிரட்டி வாங்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரிக்கப்படவுள்ளது.


இன்றும் விசாரணை தொடரும் எனக் கூறிய உயர் அதிகாரி ஒருவர், அபிநந்தனை உடல்ரீதியாக துன்புறுத்தி ராணுவ ரகசியங்கள் பெறப்பட்டனவா என விசாரிக்கவுள்ளதாகவும் கூறினார்.

1999-ம் ஆண்டு கார்கில் போரின்போது பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய விமானி உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் அபிநந்தன் மீண்டும் விமானப்படையில் சேர்க்கப்பட மாட்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 1999-ல் விமானப்படை வீரர் நச்சிகேத்தா மீட்கப்பட்ட பிறகு சரக்குப்போக்குவரத்து பிரிவுக்கு மாற்றப்பட்டார்.அதுபோல் மருத்துவ சோதனை முடிவில் காயங்கள் கண்டறியப்பட்டால் போர் விமானி படிநிலையில் இருந்து அவர் கீழிறக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒரு முறை எதிரியின் பிடியில் சிக்கி மீண்டால் போர்க்கைதியாகத்தான் பார்க்கப்படுவார் என்றும் பழைய மிடுக்கை காணமுடியாது என்பதையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனினும் 50 ஆண்டு பழமையான மிக் 21 விமானத்தின் மூலம் நான்காம் தலைமுறை F16 விமானத்தை சுட்டு வீழ்த்தியதால் அவர் கவுரவிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

இதனிடையே, அபிநந்தனிடம் ரா உளவு அமைப்பினரும் விசாரிப்பார்கள் என்றும் தெரிகிறது. சில நிர்ப்பந்தங்களால் நாட்டுக்கு எதிராக செயல்பட வாய்ப்பு உள்ளதா என்றும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

அபிநந்தன் பெயரில் ட்விட்டர் பக்கத்தின் புதிய கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதில் வாழ்த்து மழைகள் குவிகின்றன. ஆனால் ராணுவத்தின் பிடியில் இருக்கும் அவர் எப்படி ட்விட்டர் கணக்கைத் தொடங்கினார் என பல சந்தேகங்கள் எழுகின்றன, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட லைக் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது

Also Watch: அபிநந்தனைச் சந்தித்தார் நிர்மலா சீதாராமன்… பின்னணி என்ன?

First published: March 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading