ஹோம் /நியூஸ் /இந்தியா /

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்கிறார் பிரணாப் முகர்ஜியின் மகன்

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்கிறார் பிரணாப் முகர்ஜியின் மகன்

பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் முகர்ஜி

பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் முகர்ஜி

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி இன்று மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி இன்று மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்கிறார்.

மேற்கு வங்கத்தின் முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யாகவும் இருந்துள்ளார் அபிஜித் முகர்ஜி. இவர் கடந்த சில வாரங்களாகவே மம்தா பானர்ஜியுடன் பேச்சு வார்த்தைகளில் இருந்து வருகிறார். கடந்த மாதம் மம்தாவுக்கு நெருக்கமான வட்டத்தில் இருக்கும் அபிஷேக் பானர்ஜியையும் சந்தித்துப் பேசிஉள்ளார்.

இது தொடர்பாக இறுதி முடிவு எட்டப்பட்டு இன்று, திங்கட்கிழமை அபிஜித் முகர்ஜி திரிணாமூல் கட்சியில் சேர்க்கப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Also Read: நான்தான் கல்கி அவதாரம்; என் மாயசக்தியினால் உலகில் கடும் வறட்சியை ஏற்படுத்தி விடுவேன்: மிரட்டும் குஜராத் முன்னாள் அரசு ஊழியர்

கொல்கத்தாவில் சமீபத்தில் எழுந்த போலி தடுப்பூசி பிரச்சனையில் மம்தாவுக்கு வெளிப்படையாக தன் ஆதரவை தெரிவித்தார் அபிஜித் பானர்ஜி. அவர் தன் ட்வீட்டில், “போலி ஐ.ஏ.எஸ். ஆபீசர் ஒருவரின் தில்லுமுல்லுகளுக்கு மம்தாவை குறை கூறினால் பிறகு நிரவ் மோடி, விஜய் மல்லையா, மெகுல் சோக்சி முறைகேடுகளுக்கும் மோடியை குற்றம் சாட்ட வேண்டியதுதான், எனவே தனிமனித விஷமச் செயலுக்கு மம்தாவை குறைகூறிப் பயனில்லை” என்று கூறியிருந்தார்.

அபிஜித் முகர்ஜியின் சகோதரி ஷர்மிஷ்டா முகர்ஜி தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில்தான் நீடிப்பார் என்று தெரிகிறது.

மம்தாவுக்கான அபிஜித் முகர்ஜியின் கலப்பற்ற ஆதரவு மேற்கு வங்க காங்கிரஸில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் மூத்த தலைவர்கள் மோடி உட்பட கடும் பிரச்சாரம் செய்தும் மம்தா கையில் சரியான தோல்வியைச் சந்திக்க பாஜகவுக்குத் தாவிய சிலபல திரிணாமூல் தலைவர்களும் மீண்டும் கர்வாப்ஸி என திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மறைந்த மூத்த தலைவரும் முன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜியின் மகனும் திரிணாமூல் கட்சியில் சேரவிருப்பது திரிணாமூல் அங்கு மேன் மேலும் வலுவடைவதையே குறிக்கிறது என்று கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

First published:

Tags: Congress, West Bengal Assembly Election 2021