Home /News /national /

தற்காலிக ரேஷன் முறை: மக்களுக்கு நேரடியாக பணம் - பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி ராகுல் காந்தியிடம் ஆலோசனை

தற்காலிக ரேஷன் முறை: மக்களுக்கு நேரடியாக பணம் - பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி ராகுல் காந்தியிடம் ஆலோசனை

ராகுல் காந்தி அபிஜித் பானர்ஜி

ராகுல் காந்தி அபிஜித் பானர்ஜி

அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் தங்கள் மொத்த ஜிடிபியில் 10 சதவீதத்துக்கும் அதிகமாக செலவு செய்கிறார்கள்.

    ஏழை மக்கள் கைகளில் நேரடியாக பணம் கொடுப்பதன் மூலமே பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்று நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார். 

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காணொலி காட்சி மூலம் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜியுடன் உரையாற்றினார். அப்போது அவர் பேசிய அபிஜித் பானர்ஜி, ‘புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்னைகளை மாநில அரசுகள் தனிப்பட்ட முறையில் கையாள முடியாது. மத்திய அரசு அதனை மேற்பார்வை செய்யவேண்டும். வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களுக்கு மாதத் தவணைகளை ஒத்திவைத்தது நல்ல முடிவு. நாம், இன்னும் நிறைய செய்யவேண்டியுள்ளது. நிரந்தரமாக அதனை ரத்து செய்யலாம். அதிகமாக செலவு செய்வதுதான் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான வழி. மிகவும் ஏழை மக்களுக்கு நேரடியாக பணம் வழங்கவேண்டும். இதுவிவாதத்துக்குரியது. இதனை பரந்துபட்டு பார்க்கவேண்டும்.

    ஏழைகளின் கைகளில் பணத்தை வழங்கவேண்டும். பொருளாதாரத்தை மேம்படுத்த மக்கள் செலவழிக்கச் செய்வதுதான் சிறந்த வழியாகும். கொரோனாவில் இருந்து தங்கள் நாட்டுப் பொருளாாரத்தை மீட்டெடுக்க அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் தங்கள் மொத்த ஜிடிபியில் 10 சதவீதத்துக்கும் அதிகமாக செலவு செய்கிறார்கள்.

    மக்களுக்கும், நிறுவனங்களுக்கும், தொழில்களுக்கும் மிகப்பெரிய அளவில் சலுகைளையும், திட்டங்களையும் அறிவிக்கிறார்கள். அமெரிக்கா அறிவித்துள்ள அளவுக்கு நாமும் அறிவிக்கவேண்டும். ஜி.டி.பியில் இந்தியாவில் 1 சதவீத அளவுக்குதான் சலுகை அறிவித்துள்ளது. மத்திய அரசு மாநில அரசுகளுக்கு பணத்தை வழங்கவேண்டும். அதற்கான திட்டமிடல் வேண்டும்’ என்று தெரிவித்தார்.





    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:
    Published by:Karthick S
    First published:

    Tags: Rahul gandhi

    அடுத்த செய்தி