• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாள் இன்று

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாள் இன்று

அப்துல் கலாம்

அப்துல் கலாம்

  • News18
  • Last Updated :
  • Share this:
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாள் இன்று

இந்தியாவின் தெற்கு எல்லையான ராமேஸ்வரம் தீவில் ஒரு சிறுவன் கிணற்றுக்குள் கல்லை தூக்கிப்போட்டு விளையாடிக் கொண்டிருந்தான். கிணற்றுக்குள் கல் விழுந்ததும் குமிழ்கள் எழுந்துள்ளன. ஏன் குமிழ்கள் எழுகிறது அந்த சிறுவன் கேள்வி கேட்டுள்ளார். இந்தியாவாலும் அணுகுண்டை வெடிக்கச் செய்ய முடியும் என்று பின்னாளில் உலக நாடுகளை ஆச்சரியத்துடன் நம்பவைத்த ஏவுகனை விஞ்ஞானி தான் அந்தச் சிறுவன். தமிழில் கல்வி பயின்று, விஞ்ஞானத்தில் சாதனைகளைப் படைக்க முடியும் என்று இளைஞர்களுக்கு தன் வாழ்க்கை மூலம் பாடம் நடத்திச் சென்றவர் அப்துல் கலாம் ஆவார்.

இவர் படகோட்டியின் மகன், பண்பாளர், ஏவுகனை விஞ்ஞானி, மக்கள் ஜனாதிபதி, சிறந்த நிர்வாகி, குழந்தைகளின் ரோல்மாடல் என பல பரிமாணங்களை கொண்டிருந்தார். ராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் ஜெயினாலுபுதீன் - ஆஷியம்மாளுக்கு 7வது மகனாக பிறந்தவர். ராமேஸ்வரத்தில் ஆரம்ப கல்வியும், திருச்சி, ராமநாதபுரம் போன்ற இடங்களில் மேற்படிப்பையும் முடித்த அவர், சென்னை எம்.ஐ.டியில் விமான தொழில்நுட்ப கல்வியை முடித்தார்.

மேலும் கலாம் தனது கடுமையான உழைப்பால் ஆராய்ச்சிப் பணிகளில் பல சாதனைகளை புரிந்தார். அக்னி ஏவுகனை சோதனைக்குப் பின் உலகம் முழுவதும் அறியப்பட்டார். இவருடைய சாதனைகளால் பத்ம பூஷன், பத்ம விபூஷன் என விருதுகள் அவரை  தேடி வந்தன. நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்ற உன்னத மனிதர் அப்துல் கலாம் ஆவார்.

இந்த சாதனைகளை தொடர்ந்து அப்துல் கலாம் 2002ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி நாட்டின் 11வது ஜனாதிபதியாக பதவியேற்றார். தனது பணி முடியும் வரை மக்களின் ஜனாதிபதி என பெயர்பெற்றவர். குழந்தைத்தனமான குரல் வளத்தை கொண்டிருந்த கலாம், தமது பதவிக்காலத்திலும் பள்ளி மாணவர்களையும், இளைஞர்களையும் சந்தித்து உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

2015ம் ஆண்டு , இதே நாளில்  ’அருமை மாணவர்களே’ என்ற இறுதிச் சொற்களுடன் அவரின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு சாதி, மத, இன, பேதமின்றி இந்தியர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். அறிவியல் அன்றி வேறு எந்த ஒரு இயக்கமும் சாராத அவரின் காலம் ஒரு பொற்காலம் எனலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: