ராணுவ வீரர் கடத்தப்பட்டாரா? - பாதுகாப்புத்துறை பதில்

ஜம்மு காஷ்மீர்

ராணுவ வீரர் முகமது யாசின் கடந்த பிப்ரவரி 26-ந் தேதி முதல் விடுப்பில் இருந்து வருகிறார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் ராணுவ வீரரை பயங்கரவாதிகள் கடத்தியதாக வந்த தகவல் பொய்யானது என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் பாலக்கோடு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.

  இதையடுத்து இந்தியாவின் எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்தி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது பாகிஸ்தான். இதனால் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது வருகிறது.

  இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் புட்காம் மாவட்டத்தில் உள்ள குவாஜிபுராவின் சதோரா பகுதியில் உள்ள ராணுவ வீரர் முகமது யாசினை அவரது வீட்டிலிருந்து பயங்கரவாதிகள் நேற்று கடத்தி சென்றதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ராணுவ வீரரை பயங்கரவாதிகள் கடத்தியதாக வந்த தகவல் பொய்யானது என்றும் அவர் பத்திரமாக இருக்கிறார் என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  ராணுவ வீரர் முகமது யாசின் கடந்த பிப்ரவரி 26-ந் தேதி முதல் விடுப்பில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Prabhu Venkat
  First published: