கொரோனா விஷயத்தில் இளைஞர்கள் தவறான நம்பிக்கை கொண்டுள்ளனர்: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பாய்ச்சல்!

எம்.எல்.ஏ பரத்வாஜ்

யார் என்றே தெரியாத ஆனால் குரல் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த சக நோயாளி ஒருவர் மரணம் அடைகிறார் என்ற செய்தி கேட்டு உதவி செய்ய இயலாத நிலையை எனக்கு ஏற்படுத்தியது.

  • Share this:
கொரோனா விஷயத்தில் இளைஞர்களுக்கு தவறான நம்பிக்கை உள்ளது என்று டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த சவுரப் பரத்வாஜ், இவர் ஆம் ஆத்மி கட்சியின் கிரேட்டர் கைலாஷ் தொகுதி எம்.எல்.ஏவாக உள்ளார். சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது ஆக்ஸிஜன் இல்லை என அவர் உதவி கேட்டு வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

41 வயதாகும் எம்.எல்.ஏ பரத்வாஜ், தற்போது கொரோனா நெகட்டிவ் ஆகிவிட்டார் இருப்பினும் தான் மிகவும் சோர்வாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கொரோனா விஷயத்தில் இளைஞர்கள் தவறான நம்பிக்கை கொண்டுள்ளனர்: அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படும் அதிகபட்ச ஆபத்து உள்ளது. இளைஞர்கள் தங்களுக்கு கொரோனா பாதிப்பெல்லாம் ஏற்படாது என நினைத்துக் கொள்கின்றனர். கொரோனா தங்களுக்கு ஆபத்தை ஏற்படாது எனவும் அவர்கள் தவறான நம்பிக்கை கொண்டுள்ளனர் என எம்.எல்.ஏ பரத்வாஜ் தெரிவித்தார்.

கொரோனா அனுபவம் குறித்து மனம் திறந்த எம்.எல்.ஏ பரத்வாஜ் பல தகவல்களை பகிர்ந்தார்..

கடந்த ஏப்ரல் 12ம் தேதி சவுரப் பரத்வாஜ்-க்கு கொரோனா பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டது. ஆரம்ப நாட்களில் அதிக காய்ச்சல் இருந்தது. மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மருந்துகளை எடுத்துக் கொண்டேன், எனது உடல் கொரோனாவுடன் நன்கு போரிடுவதாக நினைத்துக் கொண்டேன். ஒருவாரம் கழித்து எனது உடல்நிலை மோசமானது, இதனால் எனது மனைவி கவலையடைந்தார். சில பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள சிறை கைதி!


அப்போது தான் எனது நுரையீரல் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அன்று மாலையே எனது உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தது. உடனடியாக எனக்கு மருத்துவ ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து எனக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து ஐசியூ சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டேன்.

யார் என்றே தெரியாத ஆனால் குரல் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த சக நோயாளி ஒருவர் மரணம் அடைகிறார் என்ற செய்தி கேட்டு உதவி செய்ய இயலாத நிலையை எனக்கு ஏற்படுத்தியது.

மருத்துவர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு உயிர்களை காப்பாற்றி வருகின்றனர். ஒரு பக்கம் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்ற தகவல்கள் அரசியல் ரீதியான நெருக்கடியை ஏற்படுத்துகின்றன. இது நாம் அனைவரும் ஒற்றுமையாக போராட வேண்டிய நேரம்.

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம் !


டெல்லிக்கு ஆக்ஸிஜன் சப்ளை கிடைக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். ஆக்ஸிஜன் இல்லையென்றால் தண்ணீரில் இல்லாத மீன் போலத்தான் தத்தளிக்க வேண்டியுள்ளது. ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்றால் மரணம் தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என எம்.எல்.ஏ பரத்வாஜ் கூறினார்.
Published by:Arun
First published: