டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி அபார வெற்றி; ஒரு வார்டில் கூட வெற்றி பெறாத பாஜக!

பாஜக

டெல்லி மாநகராட்சியில் கிடைத்த இந்த வெற்றி அக்கட்சிக்கு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தேவையான ஊக்கத்தை தந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

  • Share this:
டெல்லி மாநகராட்சிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 5 இடங்களில், நான்கில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. ஒரு வார்டில் கூட வெற்றி பெறாத பாஜக பெரும் சரிவை சந்தித்துள்ளது.

டெல்லி மாநகராட்சியில் காலியாக இருந்த 5 வார்டுகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் ஆம் ஆத்மி பெருவாரியான வெற்றியை ருசித்துள்ளது.

டெல்லியில் தற்போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. அடுத்த ஆண்டு அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் டெல்லி மாநகராட்சியில் காலியாக இருந்த 5 வார்டுகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 28ம் தேதி அன்று நடைபெற்றது. Kalyanpuri, Shalimar Bagh, Rohini-C மற்றும் Trilokpuri ஆகிய வார்டுகளில் ஆம் ஆத்மியும், Shalimar Bagh North-ல் பாஜகவும் முன்னர் வென்றிருந்தன.

இந்நிலையில் இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. காலை முதலே எண்ணப்பட்டு வந்த வாக்கு எண்ணிக்கையில் தற்போது முடிவுகள் தெரியவந்துள்ளன. கொரோனா பரவலுக்கு பின்னர் டெல்லியில் நடைபெறும் முதல் தேர்தலாக இது அமைந்தது, மேலும் மாதக்கணக்கில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு மத்தியில் நடைபெற்று வாக்குப்பதிவில் 50% மட்டுமே வாக்குகள் பதிவானது.

தேர்தல் முடிவுகளின்படி 4 இடங்களில் ஆம் ஆத்மியும், ஒரு இடத்தில் காங்கிரஸும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவால் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாமல் போனது

Kalyanpuri, Rohini-C, Trilokpuri, Shalimar Bagh வார்டுகளில் ஆம் ஆத்மியும், Chauhan Bangar வார்டில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.

மொத்தம் 5 வார்டுகளில் நான்கினை ஆம் ஆத்மி கைப்பற்றியதை அக்கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. கட்சி அலுவலகங்கள் முன் திரண்டு வெற்றியை ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். முன்னதாக குஜராத் மாநிலம் சூரத் நகராட்சி தேர்தலில் 27 வார்டுகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றிருந்த நிலையில் தற்போது டெல்லி மாநகராட்சியில் கிடைத்த இந்த வெற்றி அக்கட்சிக்கு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தேவையான ஊக்கத்தை தந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மாநகராட்சி இடைத்தேர்தல் வெற்றி குறித்து டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “மக்கள் பாஜகவின் ஆட்சியால் துவண்டு போயுள்ளனர், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் நேர்மையான அரசியலுக்கு ஆதரவாக மக்கள் வாக்களிப்பார்கள்” என கூறியுள்ளார்.
Published by:Arun
First published: