Home /News /national /

பஞ்சாப் வெற்றியை தொடர்ந்து, குஜராத், தென் மாநிலங்களை குறிவைக்கும் ஆம் ஆத்மி

பஞ்சாப் வெற்றியை தொடர்ந்து, குஜராத், தென் மாநிலங்களை குறிவைக்கும் ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி

Aam Aadmi Party: குஜராத் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், இன்று அங்கு யாத்திரையை ஆம் ஆத்மி கட்சி தொடங்குகிறது. இதேபோல், ஆந்திரா, தெலங்கானா, தமிழகம், புதுச்சேரி ஆகியவற்றில் உறுப்பினர் சேர்க்கையை விரைவுப்படுத்த உள்ளது.

மேலும் படிக்கவும் ...
    பஞ்சாப்பில் மாபெரும் வெற்றியை பெற்றி ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கவுள்ள  நிலையில், அடுத்ததாக குஜராத் மற்றும் தென் மாநிலங்களை அக்கட்சி குறிவைத்துள்ளது. இதற்காக யாத்திரைகள், உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் அக்கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது.

    பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. இதில், காங்கிரஸ் வசம் இருந்த பஞ்சாப் மாநிலத்தை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியுள்ளது. கோவாவில் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து பிற மாநிலங்களிலும் அக்கட்சி கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.

    குஜராத் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் முதல்கட்டமாக அந்த மாநிலத்தில்  கவனம் செலுத்தவுள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘ டெல்லி, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து தற்போது குஜராத் ஆம் ஆத்மி கட்சியை விரும்புகிறது’ என பதிவிட்டுள்ளது.  குஜராத்தில் இன்று முதல் மார்ச் 15ம் தேதிவரை 'tiranga yatra' என்ற பெயரில் யாத்திரையை அக்கட்சி நடத்த முடிவு செய்துள்ளது.

    இதேபோல், தேர்தல் வெற்றிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  ஆம் ஆத்மி கட்சியின் தென்மாநிலங்களின் பொறுப்பாளா் சோம்நாத் பாரதி, பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற அமோக வெற்றிக்குப் பிறகு, இந்தியாவின் தென் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் ஆம் ஆத்மி கட்சியின் அரசியலில் ஆா்வம் காட்டத் தொடங்கியுள்ளனா். அத்தகைய மாற்றத்திற்கான அழைப்பு தமிழகம், தெலுங்கானாவில் இருந்து வந்துள்ளது.

    இதையும் படிங்க: 4 மாநில தேர்தல் வெற்றி எதிரொலி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசம்!


    தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் ஆகியவற்றில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுத்த உள்ளோம்.  அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி தெலங்கானாவில் யாத்திரை நடத்த உள்ளோம். அதை தொடர்ந்து ஒவ்வொரு சட்டப்பேரவையையும் குறிவைத்து தொகுதிவாரியாக பிரம்மாண்ட பாதயாத்திரைக்கும் ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Aam Aadmi Party, Gujarat, Tamilnadu

    அடுத்த செய்தி