டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுச் சிறையில் அடைப்பு - ஆம் ஆத்மி தகவல்

Youtube Video

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளை சந்தித்த டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

 • Share this:
  டெல்லியில் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக 13 நாட்களாக லட்சக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சந்தித்து பேசினார். மேலும் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவும் தெரிவித்தார். அதன் பின்னர் முதலமைச்சரின் இல்லத்துக்குள் வெளியாட்கள் செல்லவோ, அவர் வெளியில் செல்லவோ விடாமல் போலீசார் கெஜ்ரிவாலை வீட்டுச்சிறையில் வைத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி டிவிட்டரில் பதிவிட்டுள்ளது.


  ஆனால் முதலமைச்சரை காவலில் வைக்கவில்லை என்று டெல்லி போலீசார் விளக்கமளித்துள்ளனர்.

     உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

   
  Published by:Vaijayanthi S
  First published: