Home /News /national /

பாஜக வழியில் ஆம் ஆத்மி- முஸ்லிம்கள் குறித்தான பார்வையில் மாற்றம்?

பாஜக வழியில் ஆம் ஆத்மி- முஸ்லிம்கள் குறித்தான பார்வையில் மாற்றம்?

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ், பாஜக இரண்டையும் ஓரங்கட்டி பெரிய வெற்றி பெற்றதையடுத்தே ஆம் ஆத்மி கட்சியின் தேசியப் பேராசை துளிர் விட்டு வருகிறது. முன்பெல்லாம் முஸ்லிம்கள் பிரச்சனை தொடர்பாக அமைதியும் மவுனமும் காத்து வந்த ஆம் ஆத்மியின் அரசியல் சொல்லாடலில் தற்போது முஸ்லிம்கள் பற்றிய பார்வை கிட்டத்தட்ட பாஜக பார்வையை ஒத்திருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ், பாஜக இரண்டையும் ஓரங்கட்டி பெரிய வெற்றி பெற்றதையடுத்தே ஆம் ஆத்மி கட்சியின் தேசியப் பேராசை துளிர் விட்டு வருகிறது. முன்பெல்லாம் முஸ்லிம்கள் பிரச்சனை தொடர்பாக அமைதியும் மவுனமும் காத்து வந்த ஆம் ஆத்மியின் அரசியல் சொல்லாடலில் தற்போது முஸ்லிம்கள் பற்றிய பார்வை கிட்டத்தட்ட பாஜக பார்வையை ஒத்திருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

  டெல்லி ஜஹாங்கிரிபுரில் இந்த மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட வன்முறைகளுக்கு ‘பங்களாதேஷிக்கள்’, ரோஹிங்கிய முஸ்லிம்கள் காரணம் என்று ஆம் ஆத்மி கூறத்தொடங்கியுள்ளது. அதாவது இந்த நகர்வு ஆம் ஆத்மி கட்சியினர் சிலருக்கே பிடிக்கவில்லை என்று ஆம் ஆத்மியை கூர்ந்து கவனிக்கும் அரசியல் கருத்தாளர்கள் சிலர் கூறுகின்றனர்.

  அதாவது பாஜக-வின் இந்துத்துவக் கொள்கையுடன் தங்களை பிணைத்துக் கொண்ட இந்து பெருமக்கள் ஆனால் ஆட்சியின் மீது கடும் அதிருப்தி கொண்டவர்களின் வாக்கு வங்கியைக் குறிவைத்து தங்களை பாஜகவுக்கு மாற்றான தேசியக் கட்சியாக பிரகடனப்படுத்திக் கொள்ள ஆம் ஆத்மி இத்தகைய முஸ்லிம் விரோத சொல்லாட்சியை சமீபமாக கையாண்டு வருவதாக சில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  இந்து மதத்தின் முக்கியமான சில விஷயங்களை தங்கள் கட்சிச் செயல்பாட்டுக்குள் ஆம் ஆத்மி கொண்டுள்ளது. ஜஹாங்கிர்புரி கலவரத்தில் பங்களாதேஷ் முஸ்லிம்கள் மற்றும் ரோஹிங்கிய முஸ்லிம்களை குற்றம்சாட்டும்போக்கு ஆம் ஆத்மியின் முந்தைய நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருப்பதாகத் தெரிகிறது.

  இதில் வேடிக்கை என்னவென்றால் பாஜகவும் ரோஹிங்கிய முஸ்லிம்களையும் பங்களாதேஷி முஸ்லிம்களையும் குற்றம்சாட்டி வரும் நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மனீஷ் சிசோடியாவும் எம்.எல்.ஏ. ஆதிஷியும் பங்களாதேஷ் பிரஜைகள் மற்றும் ரோஹிங்கியாக்கள் கலவரங்களை நடத்துவதற்காக இந்தியா முழுவதும் பாஜகவினரால் குடியேற்றப்பட்டனர் என்று புதிய குற்றச்சாட்டை முன் வைத்து வருகிறது.

  மணீஷ் சிசோடியா கூறும்போது, “இன்று பிஜேபியால் நாடு முழுவதும் போக்கிரித்தனம் பரவியிருக்கிறது... நான் அவர்களைக் கேட்கிறேன், கடந்த எட்டு ஆண்டுகளில் பாஜக ஏன் நாடு முழுவதும் வங்காளதேச முஸ்லிம்கள் மற்றும் ரோஹிங்கியாக்களுக்கு அடைக்கலம் கொடுத்தது? அவர்கள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர், பின்னர் நாடு முழுவதும் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்க த அவர்களையே பயன்படுத்தினர்” என்று குற்றம்சாட்டினார்.

  குஜராத், இமாச்சலத்தில் தேர்தல் வரவிருப்பதால், இந்தக் கதையாடல் மாற்றம் தங்கள் கட்சிக்கு ஒரு பெரிய அடிப்படையை வழங்கும் என்று ஆம் ஆத்மி நம்புவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

  பல தொலைக்காட்சி நேர்காணல்களில் கெஜ்ரிவால் ஹனுமான் சாலிசாவை ஓதினார் மற்றும் அவரது கட்சி சகாக்கள் ஹனுமான் பேரணிகள் மற்றும் சமய நிகழ்வுகளான சுந்தர்காண்டப் பாராயணம் போன்றவற்றில் முதலீடு செய்ததன் மூலம், ஆம் ஆத்மி இந்துக் கடவுளான ஹனுமானுக்குப் பின்னால் தனது இந்து பலத்தை ஒன்று திரட்ட முயற்சி செய்கிறது.

  ஆம் ஆத்மியின் இந்தப் புதிய அவதாரம் குறித்து பெயர் கூற விரும்பாத ஆம் ஆத்மி நபர் ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றில் கூறும்போது, “இது தேர்தல் அரசியல் தந்திரம். பாஜகவுக்கு வாக்கு வங்கி இருக்கிறது, ஆனால் பொருளாதார ரீதியாக பாஜக மீது இவர்களுக்கு அதிருப்தி உள்ளது. வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்றவை உள்ளன. ஆம் ஆத்மி இந்த வாக்குகளை தன் பக்கம் இழுக்கப் பார்க்கிறது” என்றார்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Arvind Kejriwal, BJP, Hindu

  அடுத்த செய்தி