யோகி ஆட்சியா, கேஜ்ரிவால் ஆட்சியா? எது சிறந்தது? விவாதத்துக்குத் தயார்: மணீஷ் சிசோடியா சவால்

யோகி ஆட்சியா, கேஜ்ரிவால் ஆட்சியா? எது சிறந்தது? விவாதத்துக்குத் தயார்: மணீஷ் சிசோடியா சவால்

யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் யோகி தலைமை பாஜக ஆட்சி சிறந்ததா அல்லது டெல்லியில் நடைபெறும் கேஜ்ரிவால் ஆட்சி சிறந்ததா என்ற விவாதத்துக்குத் தயார் என்று லக்னோ வந்த டெல்லி துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான மணீஷ் சிசோடியா சவால் விடுத்துள்ளார்.

 • Share this:

  உத்தரப் பிரதேச அமைச்சர்கள் பலர் டெல்லி, உ.பி. மாநிலங்களில் நிலவும் கல்வி மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட வசதிகள் குறித்து கேஜ்ரிவால் விவாதிக்கத் தயாரா என்று கேள்விகளை எழுப்பி சவாலுக்கு அழைத்ததை ஏற்றுக் கொண்டதாகவும் விவாதத்துக்குத் தயார் என்றும் மணீஷ் சிசோடியா இன்று லக்னோவில் செய்தியாளர்களிடம் கூறினார்.

  “ஆம் ஆத்மி போன்ற சிறந்த ஆட்சியை எதிர்நோக்கி உ.பி. மக்கள் 70 ஆண்டுகளாக காத்துக் கிடக்கின்றனர். தங்கள் குழந்தைகளுக்குத் தரமான கல்வியை அளிப்பவர்களை அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

  நல்ல மருத்துவமனைகள், பள்ளிகள், மலிவான மின்சாரம், நீராதாரம் ஆகிய தேவைகளை அளிக்கும் ஆட்சியை உத்தரப் பிரதேச மக்கள் எதிர்நோக்கியுள்ளனர். இவர்களை கடந்த 70 ஆண்டுகளாக ஏமாற்றி வந்துள்ளனர்.

  உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடும் என்று அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்ததிலிருந்து உ.பி. பாஜகவினர் தடுமாற்றம் அடைந்துள்ளனர்.யோகி அமைச்சரவைச் சகாக்கள் கேஜ்ரிவால் ஆட்சியா, தங்கள் ஆட்சியா? எது சிறந்தது என்று சவாலுக்கு அழைக்கின்றனர்.

  சவாலை ஏற்று லக்னோ வந்துள்ளேன் ஆனால் உ.பி. அமைச்சர் சித்தார்த் நாத் சிங் இன்னமும் விவாதத்துக்கான இடத்தையும் நேரத்தையும் சொல்லவில்லை.

  இன்று முழுதும் லக்னோவில்தான் இருப்பேன். டெல்லி மருத்துவமனைகள், கல்வி நிலையங்களை உலகமே பாராட்டுகிறது. டெல்லியில் 70-80% மக்கள் இலவச மின்சாரம் பெறுகின்றனர். ஆனால் உத்தரப் பிரதேசத்தில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கேஜ்ரிவால் ஆட்சி மாதிரி, யோகி ஆட்சி மாதிரி இடையே நிச்சயம் விவாதம் தேவைதான்.” என்றார் மணீஷ் சிசோடியா.
  Published by:Muthukumar
  First published: