Home /News /national /

'ஆணவத்தில் ஆடுகிறது பாஜக; ஆம் ஆத்மிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்...' : குஜராத்தில் கெஜ்ரிவால் பேச்சு

'ஆணவத்தில் ஆடுகிறது பாஜக; ஆம் ஆத்மிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்...' : குஜராத்தில் கெஜ்ரிவால் பேச்சு

குஜராத் பேரணியில் கெஜ்ரிவால், பக்வாந்த் மன்

குஜராத் பேரணியில் கெஜ்ரிவால், பக்வாந்த் மன்

டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிகரமாக ஆட்சி நடத்தி வருகிறது. இப்போது குஜராத் தேர்தலில் கவனம் செலுத்துகிறோம் - பக்வாந்த் மன்

    பாஜக ஆணவத்தில் ஆடுவதாகவும், ஆம் ஆத்மி கட்சிக்கு குஜராத் வாக்காளர்கள் ஒருமுறை வாய்ப்பு தர வேண்டும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.

    டெல்லி, பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றிகளைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் பார்வை தற்போது குஜராத் பக்கம் திரும்பியுள்ளது. இங்கு இந்தாண்டு இறுதிக்குள் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளது.

    இந்த நிலையில், அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரம் அருகே டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேரணி நடத்தினார். இதில் பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி முதல்வர் பக்வாந்த் மன்னும் கலந்து கொண்டார்.

    பேரணிக்கு பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், ‘நான் இங்கு எந்தக் கட்சியையும் விமர்சிக்க வரவில்லை. நான் இங்கு பாஜகவை தோற்கடிக்க வரவில்லை. நான் இங்கு காங்கிரசை வெல்ல வரவில்லை. நான் குஜராத் வெற்றி பெறுவதற்காக இங்கு வந்துள்ளேன். குஜராத்தும் குஜராத் மக்களும் வெற்றி பெற வேண்டும். குஜராத்தில் இருக்கும் ஊழல் முறைகேடுகளை நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

    இதையும் படிங்க - தண்டவாளத்தில் விரிசல்... சிவப்பு சேலையை கட்டிவைத்து நூற்றுக்கணக்கானோரை காப்பாற்றிய மூதாட்டி

    25 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு ஆணவம் வந்து விட்டது. அவர்கள், மக்களின் பிரச்னைகளை கவனத்தில் கொள்வதில்லை. பஞ்சாப் வாக்காளர்களைப் போன்று இந்த முறை ஆம் ஆத்மி கட்சிக்கு குஜராத் வாக்காளர்கள் வாய்ப்பு அளியுங்கள். நீங்கள் திருப்தி கொள்ளாவிட்டால் அடுத்த தேர்தலில் எங்களை நீக்கி விடுங்கள். ஒரு முறை ஆம் ஆத்மிக்கு வாய்ப்பு அளித்தால் பின்னர் நீங்கள் மற்ற அனைத்து கட்சிகளையும் மறந்து விடுவீர்கள்’ என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க - 30 ஆண்டுகளில் எந்த கட்சியும் செய்யாத சாதனையை மாநிலங்களவையில் படைத்த பாஜக

    பஞ்சாப் முதல்வர் பக்வாந்த் மன் கூறுகையில், 'டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிகரமாக ஆட்சி நடத்தி வருகிறது. இப்போது குஜராத் தேர்தலில் கவனம் செலுத்துகிறோம்' என்று தெரிவித்தார்.

    டெல்லியில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை ஆம் ஆத்மி கட்சி ஓரம் கட்டியது. பஞ்சாபில், இந்த முறை மக்கள் காங்கிரசுக்கு வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி பஞ்சாபை வெற்றி கொண்டது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஆம் ஆத்மி மாறி வருகிறது என்று அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Aam Aadmi Party

    அடுத்த செய்தி