ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஆம் ஆத்மி எம்.எல்.ஏவை விரட்டி விரட்டி தாக்கிய கட்சி நிர்வாகிகள்... வெளியான பரபரப்பு வீடியோ!

ஆம் ஆத்மி எம்.எல்.ஏவை விரட்டி விரட்டி தாக்கிய கட்சி நிர்வாகிகள்... வெளியான பரபரப்பு வீடியோ!

தாக்கப்பட்ட எம்.எல்.ஏவின் விடியோ காட்சி

தாக்கப்பட்ட எம்.எல்.ஏவின் விடியோ காட்சி

சீட் ஒதுக்குவது தொடர்பாக தொண்டர்கள் சிலர், குலாப் சிங்குடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், குலாப் சிங்கை அங்கிருந்தவர்கள் தாக்க தொடங்கினர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ குலாப் சிங் யாதவை, கட்சி தொண்டர்கள் சிலர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  டெல்லியில் மாநகராட்சி தேர்தல் வரும் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதற்கான வாக்குகள் டிசம்பர் 7ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 250 வார்டுகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலில் வெற்றி பெற, ஆம் ஆத்மிக்கும் பாஜகவிற்கும் இடையில் கடும்போட்டி நிலவுகிறது.

  இதையும் படிக்க : ''இதுதான் சான்ஸ்''.. மேடையில் ஏறி டான்ஸ் ஆடிய அமைச்சர் ரோஜா.. ஆச்சரியப்பட்ட மாணவிகள்!

  இந்நிலையில், டெல்லி மடியாலா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குலாப் சிங் யாதவ், ஷியாம் விகார் பகுதியில் கட்சி நிர்வாகிகளுடன் மாநகராட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி கொண்டிருந்தார். அப்போது சீட் ஒதுக்குவது தொடர்பாக தொண்டர்கள் சிலர், குலாப் சிங்குடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், குலாப் சிங்கை அங்கிருந்தவர்கள் தாக்க தொடங்கினர்.

  அப்போது அந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அங்கிருந்து ஓட முயற்சித்தார். ஆனால் அங்கு கூடியிருந்தவர்கள் அவரை விரட்டி வந்து தாக்கத்தொடங்கினர். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  மேலும் இந்த வீடியோவை பாஜக நிர்வாகிகள் தங்களது பக்கங்களில் பகிர்ந்து, டெல்லியின் மாநகராட்சி வேட்பாளர்களுக்கும் ஏலம் விட்டுதான் ஆட்களை தேர்வு செய்கின்றனர் என குற்றம்சாட்டுகின்றனர். இந்த குற்றச்சட்டுக்கு ஆம் ஆத்மி கட்சி இதுவரை எந்த பதிலையும் கூறவில்லை. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Aam Aadmi Party, Delhi, Local Body Election 2022, MLA