Home /News /national /

நான் ராஜ்புத் வம்சத்தைச் சேர்ந்தவன்.. தலையே போனாலும் தலைவணங்க போவதில்லை - மணீஷ் சிசோடியா

நான் ராஜ்புத் வம்சத்தைச் சேர்ந்தவன்.. தலையே போனாலும் தலைவணங்க போவதில்லை - மணீஷ் சிசோடியா

மணீஷ் சிசோடியா

மணீஷ் சிசோடியா

Manish Sisodia : பாஜகவில் இணைந்தால் தன் மீதான அமலாக்கத்துறை, சிபிஐ வழக்குகள் ரத்து செய்யப்படும் என பாஜகவிலிருந்து தகவல் வந்துள்ளதாக மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India
    பாஜகவில் இணைந்தால் வழக்குகள் ரத்து செய்யப்படும் என தனக்கு செய்தி வந்துள்ளதாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கூறியுள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    டெல்லியில் கலால் வரி விதிப்பு முறை மாற்றியமைக்கப்பட்டதில் பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. புகாரை தொடர்ந்து துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தொடர்புடைய 31 இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், மணீஷ் உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மணீஷ் சிசோடியா முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் குஜராத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவில் இணைந்தால் தன் மீதான அமலாக்கத்துறை, சிபிஐ வழக்குகள் ரத்து செய்யப்படும் என பாஜகவிலிருந்து தகவல் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். கட்சியை விட்டு வெளியேறினால், சிபிஐ, இடி வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்றும், கட்சியை விட்டு வெளியேறும்போது அதை உடைத்து விடுவதாகவும் எனக்கு குறுஞ்செய்தி வந்தது, அவர்களும் எனக்கு முதல்வர் பதவி தருவதாக உறுதியளித்தனர். நான் இங்கு முதல்வராக வரவில்லை, நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக வந்துள்ளேன். ராஜ்புத் வம்சத்தைச் சேர்ந்த தான் தலையே போனாலும் ஊழலுக்கும் சதிக்கும் , தலைவணங்க போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

    Also Read: பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் கான்வாய் மீது கல்வீச்சு தாக்குதல்... 13 பேர் கைது!

    உலகமே போற்றும் கல்வி முறையை அமல்படுத்தியுள்ள மணீஷ் சிசோடியாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆனால் அதற்கு மாறாக சிபிஐ-யை ஏவிட்டு சோதனை நடத்துவதாக குற்றம்சாட்டினார். ஒட்டு மொத்த இந்தியாவின் கல்வி திட்டத்தை மணிஷ் சிசோடியாவிடம் ஒப்புடைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மணீஷ் சிசோடியா கைது செய்யப்படலாம் என குறிப்பிட்டுள்ள கெஜ்ரிவால், தானும் கைது செய்யப்படலாம் என்றும் இவை அனைத்தும் குஜராத் தேர்தலுக்காக செய்யப்படுவதாக தெரிவித்தார்.

    மணீஷ் சிசோடியாவின் குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதில் அளிக்காத பாஜக, அர்விந்த் கெஜ்ரிவால் யாரையெல்லாம் ஊழல் அற்றவர்கள் என கூறுகிறாரோ, அவர்கள் எல்லாம் சிறைக்கு செல்வதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், மதுபான கொள்கை ஊழலில் தெலங்கானா முதலமைச்சரின் மகள் கவிதாவுக்கும் தொடர்பிருப்பதாக கூறிய பாஜகவின் எம்.பி. பர்வேஸ் வர்மா மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடர இருப்பதாக கவிதா கூறியுள்ளார்,ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள டெல்லி துணை முதலமைச்சரை பதவி விலக்க வலியுறுத்தி, அம்மாநில முதலமைச்சர் கெஜ்ரிவாலின் வீட்டை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம் நடத்தினர்

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Aam Aadmi Party, Arvind Kejriwal, Delhi, Politics

    அடுத்த செய்தி