தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் என்றும், ஆனால், துணை நிலை ஆளுநர் யார் என்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் துணை நிலை ஆளுநர் சக்சேனாவுக்கும், ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், டெல்லி ஆரம்ப பள்ளி ஆசிரியர்களை பின்லாந்துக்கு அனுப்பி அங்குள்ள கல்விமுறை குறித்த பயிற்சி பெற வைக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டிருந்தார். ஆனால், அந்த திட்டத்திற்கு ஒப்புதல் தராத துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, இந்தியாவிலேயே பயிற்சி வழக்குவது குறித்து டெல்லி அரசு திட்டமிடுமாறு வலியுறுத்தினார்.
இதனால், கடும் அதிருப்தி அடைந்த அரவிந்த் கெஜ்ரிவால், சட்டசபை விவாதத்தில் உரையாற்றினார்.அப்போது, எனது பணிகளை ஆளுநர் துருவி துருவி பார்ப்பதுபோல, தனது ஆசிரியர் கூட தனது வீட்டுப்பாடத்தை சரிபார்த்தது இல்லை என தெரிவித்தார். தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் என்றும், ஆனால், இந்த துணை நிலை ஆளுநர் யார் என்றும் கேள்வி எழுப்பிய கெஜ்ரிவால், நமது குழந்தைகள் எப்படி படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க அவர் யார் என்றும் விமர்சித்தார்.
“சாலைகள் தரமில்லை..” புகார் அளித்தவர் காலை கழுவி மன்னிப்பு கேட்ட அமைச்சர்!
குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை நிலை ஆளுநருக்கு, தங்களை தடுக்கும் அதிகாரம் இல்லை என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் காட்டமாக தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arvind Kejriwal