சாக்கடையில் குதித்து சுத்தம் செய்த கவுன்சிலர்.. பால் அபிஷேகம் செய்து கொண்டாடிய ஆதரவாளர்கள்..வைரல் வீடியோ!
சாக்கடையில் குதித்து சுத்தம் செய்த கவுன்சிலர்.. பால் அபிஷேகம் செய்து கொண்டாடிய ஆதரவாளர்கள்..வைரல் வீடியோ!
Haseeb-ul-Hasan
AAP councilor | டெல்லியில் சாக்கடை தொட்டியில் இறங்கி குப்பைகளை அகற்றி சுத்தம் செய்த ஆம் ஆத்மி கவுன்சிலருக்கு அக்கட்சியின் தொண்டர்கள் பால் அபிஷேகம் செய்துள்ளனர்.
டெல்லியில் ஆம் ஆத்மி கவுன்சிலர் ஒருவர் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த பின்னர் அவரது ஆதரவாளர்கள் பால் அபிஷேகம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லி சாஸ்திரி பூங்கா பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகாலில் குப்பைகள் தேங்கியதால் கழிவுநீர் சரிவர வெளியேறாமல் நிரம்பி வழிந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்துளனர். கிழக்கு டெல்லியை சேர்ந்த ஆம் ஆத்மி கவுன்சிலர் ஹசீப்-உல்-ஹசன் கழிவுப் பொருட்களால் நிரம்பி வழியும் சாக்கடை தொட்டியில் இறங்கி குப்பைகளை அகற்றி சுத்தம் செய்துள்ளார். மார்பு அளவு இருந்த கழிவுநீர் தொட்டியில் தடாரென குதித்து படபடவென அவர் செய்த இந்த செயல் சுற்றியிருந்த மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
एमसीडी चुनावी ड्रामा !
पूर्वी दिल्ली से आप पार्षद हसीब उल हसन नाले की सफाई के लिए नाले में उतरे ,फिर उन्हें दूध से नहलाया गया pic.twitter.com/NAIjgdHpnH
— Mukesh singh sengar मुकेश सिंह सेंगर (@mukeshmukeshs) March 22, 2022
தேர்தல் நேரத்தில் அவர் செய்த இந்த செயலால் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். குப்பையை அகற்றியபோது அவர் அசுத்தம் அடைந்தார். இதனையடுத்து முதல்வன் படபாணியில் ஹசீப்-உல்-ஹசன் மீது பால் ஊற்றி அவரது ஆதரவாளர்கள் குளிப்பாட்டினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. பலமுறை புகார் அளித்தும் பா.ஜ.க கவுன்சிலரும், பா.ஜ.க எம்எல்ஏ.,வும் உதவி செய்யவில்லை எனவும் அதனால் தானே களத்தில் இறங்கி வேலை செய்ததாகவும் ஹசீப்-உல்-ஹசன் தெரிவித்துள்ளார்.
Published by:Lilly Mary Kamala
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.