தனித்து களம் காணும் ஆம் ஆத்மி! வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிப்பு

ஆம் ஆத்மி

டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  டெல்லியின் ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளில் ஆறு தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

  நாடாளுமன்றத் தேர்தலுக்கு கூட்டணி, தொகுதி பங்கீடு விவகாரங்களில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் பரபரப்பாக இயங்கிவருகின்றன. தொகுதிப் பங்கீடு நிறைவடைந்த கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்துவருகின்றன.

  இந்நிலையில், டெல்லியிலுள்ள ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை ஆம் ஆத்மி கட்சி தலைமை இன்று அறிவித்துள்ளது.

  டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய், ‘நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள ஏழு தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளனர். கிழக்கு டெல்லியில் அடிஷி, வடமேற்கு டெல்லியில் ககன் சிங், தெற்கு டெல்லியில் ராகவ் சத்தா, வடகிழக்கு டெல்லியில் திலிப் பாண்டே, மேற்கு டெல்லியில் பங்கஜ் குப்தா ராயும் போட்டியிடுவார்கள்’ என்று தெரிவித்தார்.

  வேட்பாளர்களான இவர்கள் 6 பேரும் ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் குழு பொறுப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தொகுதி பங்கீட்டில் இரு கட்சிகளுக்கு உடன்பாடு ஏற்படாதநிலையில், ஆம் ஆத்மி தனித்து களம் இறங்குகிறது.

  Also see:

  Published by:Karthick S
  First published: