Home /News /national /

300 யூனிட்கள் இலவச மின்சாரம் - அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பஞ்சாப் அரசு

300 யூனிட்கள் இலவச மின்சாரம் - அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பஞ்சாப் அரசு

மின் கட்டணம்

மின் கட்டணம்

ஜூலை 1, 2022 முதல் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசு முக்கிய செய்தித்தாள்களில் அதிகாரப்பூர்வ விளம்பரம் வெளியிட்டுள்ளது.

    ஜூலை 1, 2022 முதல்  300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசு முக்கிய செய்தித்தாள்களில் அதிகாரப்பூர்வ விளம்பரம் வெளியிட்டுள்ளது.

    அறிவிப்பு தொடர்பான விவரங்கள் இனிமேல்தான் வெளியிடப்படும் என்று தெரிகிறது.  பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவது என்பது 2022 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆம் ஆத்மி கட்சி (AAP) அளித்த முக்கிய வாக்குறுதியாகும். மாநிலத்தில் அக்கட்சி ஆட்சி அமைத்து ஒரு மாதத்திற்கு பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

    பஞ்சாபில் தற்போது விவசாயத் துறைக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. மேலும், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.

    பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மாநில அரசு விரைவில் மாநில மக்களுக்கு நல்ல செய்தியை வழங்கும் என்று வாரத்தின் தொடக்கத்தில் கூறியிருந்தார். இந்த அறிவிப்புக்கு முன்னதாக, மூத்த காங்கிரஸ் தலைவர் சுக்பால் சிங் கைரா இந்த அறிவிப்பைச் சுற்றியுள்ள அச்சங்களை எழுப்பினார்.

    “பக்வந்த்மான் அரசாங்கம் குறும்புத்தனமாக குறுக்கு மானியம் செய்யப் போகிறது என்பதை நான் அறிந்தேன்! அவர்கள் 10 ஏக்கர் மற்றும் அதற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு குழாய் கிணறு பில்களை சுமத்துவார்கள், பின்னர் அந்த சேமிப்பில் இருந்து 300 யூனிட்களை இலவசமாக வழங்குவார்கள்! இந்த உத்தரவாதத்தை அளிக்கும் போது இந்த மோசடியை அரவிந்த் கேஜ்ரிவால்  குறிப்பிடவில்லை” என்று ட்விட்டர் பதிவில் சாடியுள்ளார்.

    மற்ற வீடுகளுக்கு, இரண்டு மாதங்களில் 600 யூனிட்களை தாண்டினால், முழு மின் பயன்பாட்டிற்கும் நுகர்வோர் கட்டணம் செலுத்த வேண்டும் என்கிறார் முதல்வர் பகவந்த் மான்.
    மேலும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும் அதே வேளையில் தொழில் மற்றும் வணிக நுகர்வோருக்கான மின் கட்டணம் உயர்த்தப்படாது என்றார்.

    மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையிலான அரசு இன்றுடன் ஒரு மாதத்தை நிறைவு செய்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Electricity, Punjab

    அடுத்த செய்தி