நெட்வொர்க் 18 குழுமத்தின் 'மிஷன் பானி' பிரசாரத்தில் கைக்கோர்த்த நடிகர் அமீர் கான்!

நிலத்தடி நீரை சேமிப்பதே நமது முதல் பணி எனக் கூறிய அமீர் கான், இதற்கான வேலைகளை முதலில் மகாராஷ்டிராவில் தொடங்கியுள்ளதாகக் கூறினார்.

Web Desk | news18
Updated: July 3, 2019, 11:05 PM IST
நெட்வொர்க் 18 குழுமத்தின் 'மிஷன் பானி' பிரசாரத்தில் கைக்கோர்த்த நடிகர் அமீர் கான்!
அமீர்கான்
Web Desk | news18
Updated: July 3, 2019, 11:05 PM IST
நெட்வொர்க் 18 குழுமத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள மிஷன் பாணி பிரசாரம் பாலிவுட் நடிகர் அமீர் கான் கரம் கோர்த்துள்ளார்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீரை சேமிப்பது எப்படி என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மிஷன் பாணி என்ற பிரசாரத்தை நெட்வொர்க் 18 குழுமம் தொடங்கியுள்ளது.

இந்தப் பிரசாரத்தில் கரம் கோர்த்துள்ள நடிகர் அமீர் கான், பிரதமர் நரேந்திர மோடி மன் கீபாத்தில் கூறியது போல தண்ணீரை சேமிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதாக தெரிவித்தார்.

இதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜல மந்திராலாயா திட்டம் உண்மையிலேயே மிகச்சிறப்பான திட்டம் என்றும் அவர் கூறினார். நிலத்தடி நீரை சேமிப்பதே நமது முதல் பணி எனக் கூறிய அமீர் கான், இதற்கான வேலைகளை முதலில் மகாராஷ்டிராவில் தொடங்கியுள்ளதாகக் கூறினார்.

மும்பையில் கனமழை கொட்டித் தீர்த்தாலும், முறையான சேமிப்புத் திட்டங்கள் இல்லாததால் அந்த நீர் வீணாவதாகக் கூறிய அவர், தனது குடியிருப்பில் கூட  இதேநிலைதான் உள்ளதாக வேதனை தெரிவித்தார். இதனை மாற்றி, மழைநீர் சேமிப்பு என்பதை நாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் அமீர் கான் அறிவுறுத்தினார்.

Also watch :  கோவில் விழாவில் நடிகர் வடிவேலு ஆடல் பாடல்!
First published: July 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...