எதிர்கால சந்ததிகளுக்காகத் தண்ணீரைச் சேமியுங்கள்! குரல் கொடுக்கும் அமீர்கான், அமிதாப் பச்சன்

#MissionPaani | #JanShakti4JalShakti | #தண்ணீர்_இயக்கம் | மத்திய நீர் சக்தி துறை முன்னெடுத்திருக்கும் ஜல் சக்தி அபியான் திட்டத்துக்கு பாலிவுட் நடிகர்கள் அமீர்கான், அபிஷேக் பச்சன் ஆகியோர் ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவை பிரதமர் மோடி ரீட்விட் செய்துள்ளார்.

எதிர்கால சந்ததிகளுக்காகத் தண்ணீரைச் சேமியுங்கள்! குரல் கொடுக்கும் அமீர்கான், அமிதாப் பச்சன்
தண்ணீரை சேமிப்போம்
  • News18
  • Last Updated: August 24, 2019, 1:51 PM IST
  • Share this:
மத்திய நீர் சக்தி துறை முன்னெடுத்திருக்கும் ஜல் சக்தி அபியான் திட்டத்துக்கு பாலிவுட் நடிகர்கள் அமீர்கான், அமிதாப் பச்சன் ஆகியோர் ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவை பிரதமர் மோடி ரீட்விட் செய்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு, தண்ணீர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, ஜல் சக்தி அபியான் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. மத்திய நீர் சக்திதுறை(ஜல்சக்தி) அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், இன்று மதியம் இந்தத் திட்டத்தை தொடங்கிவைத்தார்.

இந்த ஜல் சக்தி அபியான் திட்டமுன்னெடுப்புக்கு ஆதரவு தெரிவித்து பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அமீர்கான் வீடியோவாக பேசியுள்ளனர். அந்த வீடியோவை ஜல்சக்தி அபியான் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவை பிரதமர் மோடி ரீட்விட் செய்துள்ளார்.
ஜல்சக்தி அபியான் குறித்து பேசிய அமிதாப் பச்சன், ‘எல்லாரும் அவர்களுடைய சக்திக்கு உட்பட்டு தண்ணீர் பாதுகாப்புக்காக முயற்சிகள் எடுக்கவேண்டும். வரும் மழைக்காலங்களில் எதிர்காலத்துக்காக மக்கள் தங்களுடைய பங்களிப்பை அளிக்கவேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.தண்ணீர் பாதுகாப்பு குறித்து பேசிய அமீர்கான், ‘வரும் காலங்கள் சிறப்பாக இருப்பதற்கும், நம்முடைய எதிர்கால சந்ததிகளுக்கும், நாட்டுக்கும், இன்று நாம் தண்ணீரைச் சேமிக்க வேண்டியது மிகவும் அவசியமானது’ என்று தெரிவித்துள்ளார்.

Also see:

First published: July 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading