ஆம் ஆத்மியின் அசுர வெற்றி! கெஜ்ரிவாலின் மனைவிக்குக் கிடைத்த மறக்க முடியாத பிறந்தநாள் பரிசு

ஆம் ஆத்மியின் அசுர வெற்றி! கெஜ்ரிவாலின் மனைவிக்குக் கிடைத்த மறக்க முடியாத பிறந்தநாள் பரிசு
கெஜ்ரிவால், சுனிதா
  • Share this:
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு கிடைத்த அசுர வெற்றி அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது.

டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி 62 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதன்மூலம், ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதியாகியுள்ளது.
டெல்லி முழுவதும் ஆம் ஆத்மி கட்சியினர் மிகப்பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


ஆம் ஆத்மியை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க 8 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸால் ஒரு தொகுதியில் கூட முன்னிலையைக் கூட பெற முடியவில்லை. எனவே, ஆம் ஆத்மியின் வெற்றி உறுதியாகியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றிப் பெற்றிருக்கும் நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றொரு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று அவருடைய மனைவி சுனிதா கெஜ்ரிவாலுக்குப் பிறந்தநாள். எளிமையாக நடைபெற்ற சுனிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டார். இருவரும் பரஸ்பரம் கேக்கை ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, வீடு வீடாக சென்று சுனிதாவும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அரவிந்த் கெஜ்ரிவாலை தீவிரவாதி என்று அழைத்த பா.ஜ.கவுக்கு சுனிதா பதிலடி கொடுத்தார்.

பிரச்சாரத்தின்போது பேசிய சுனிதா, ‘எனக்கும் அவருக்கும் திருமணம் நடந்து 25 ஆண்டுகளாகின்றன. சமூக சேவை செய்வதுதான் தன்னுடைய விருப்பம் என்று எப்போதும் கூறுவார். அவரைத் தீவிரவாதி என்று அழைத்த பா.ஜ.கவுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்’ என்று ஆக்ரோஷமாக பேசியிருந்தார். டெல்லி சட்டமன்றத் தேர்தல் ஆம் ஆத்மி கட்சி பெற்றிருக்கும் அபார வெற்றி அவருக்கு பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது.Also see:


 
First published: February 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்