முகப்பு /செய்தி /இந்தியா / குஜராத் தேர்தலில் வெற்றி கணக்கை தொடங்கிய ஆம் ஆத்மி.. தேசிய கட்சி அந்தஸ்து பெற வாய்ப்பு

குஜராத் தேர்தலில் வெற்றி கணக்கை தொடங்கிய ஆம் ஆத்மி.. தேசிய கட்சி அந்தஸ்து பெற வாய்ப்பு

தேசிய கட்சி அந்தஸ்தை பெறப்போகும் ஆம் ஆத்மி

தேசிய கட்சி அந்தஸ்தை பெறப்போகும் ஆம் ஆத்மி

Aam Aadmi Party | ஏற்கனவே டெல்லி, பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் மாநில கட்சி என்ற அந்தஸ்தை ஆம் ஆத்மி பெற்றுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

குஜராத் மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் மூலம் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டமன்றத்திற்கு டிசம்பர் 1, டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தல் வரை பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மட்டுமே நேரடி போட்டி இருந்த நிலையில், இம்முறை ஆம் ஆத்மி கட்சியும் தேர்தலில் முழுவீச்சில் களமிறங்கியதால் குஜராத் தேர்தல் களம் மும்முனை போட்டியாக மாறியது.

தற்போதைய நிலவரப்படி ஆம் ஆத்மி 5 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அத்துடன் மாநிலத்தில் சுமார் 10 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை பெற்றுள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மிக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காவிட்டாலும் ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சி என்ற அந்தஸ்தை குஜராத் தேர்தல் முடிவுகள் மூலம் பெறவுள்ளது. ஒரு கட்சி தேசிய அந்தஸ்தை பெற வேண்டும் என்றால் குறைந்தது நான்கு மாநிலங்களில் மாநில கட்சி அந்தஸ்து என்ற அங்கீகாரத்தை பெற வேண்டும். ஆம் ஆத்மி டெல்லியிலும், பஞ்சாப்பிலும் ஆட்சியில் உள்ளது.

அதேபோல், கோவாவிலும் கணிசமான வாக்கு சதவீதத்தை பெற்று மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது. குஜராத்தில் 2 சீட்டுகள் அல்லது 6 சதவீத வாக்குகளை பெற்றாலே 4ஆவது மாநிலத்தில் அங்கீராம் பெற்று தேசிய கட்சி ஆந்தஸ்தை பெறும். வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, இரட்டை இலக்க வாக்கு சதவீத்ததுடன், 5 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளதால் தேசிய அந்தஸ்து கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க: குஜராத் தேர்தல்: பாஜக எம்எல்ஏ ஆகிறார் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி.!

அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இயக்கம் நடத்திய போராட்டத்தின் பின்னணியில் 2012ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டது. அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இந்தியாவில் தற்போது பாஜக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 7 கட்சிகள் தேசிய கட்சிகள் அந்தஸ்த்தில் உள்ளன.

First published:

Tags: Aam Aadmi Party, Arvind Kejriwal, Gujarat