Home /News /national /

பஞ்சாப் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து குஜராத்தை குறிவைக்கும் ஆம் ஆத்மி...

பஞ்சாப் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து குஜராத்தை குறிவைக்கும் ஆம் ஆத்மி...

AAP | 'கடந்த பல ஆண்டுகளாக இந்திய மக்கள் 2 கட்சிகளில் ஒன்றை மட்டும் தேர்வு செய்து வந்தனர். இந்த முறை இரு பெரும் கட்சிகளுக்கும் மாற்று வந்து விட்டது.'

AAP | 'கடந்த பல ஆண்டுகளாக இந்திய மக்கள் 2 கட்சிகளில் ஒன்றை மட்டும் தேர்வு செய்து வந்தனர். இந்த முறை இரு பெரும் கட்சிகளுக்கும் மாற்று வந்து விட்டது.'

AAP | 'கடந்த பல ஆண்டுகளாக இந்திய மக்கள் 2 கட்சிகளில் ஒன்றை மட்டும் தேர்வு செய்து வந்தனர். இந்த முறை இரு பெரும் கட்சிகளுக்கும் மாற்று வந்து விட்டது.'

    பஞ்சாப் சட்டமன்ற தேர்தலைத் தொடர்ந்து குஜராத் சட்டமன்ற தேர்தலில் தீவிரம் காட்டப் போவதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் இன்றைக்கு அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் அங்கு மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 90 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 17 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்த அசாதாரண வெற்றியால் ஆம் ஆத்மி தலைவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சிக்கு தேசிய அளவில் மாற்று நாங்கள்தான் என்று கூறி அவர்கள், எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமராக அரவிந்த் கெஜ்ரிவால் வருவார் என்று பேசி வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாப் வெற்றி குறித்து ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அக்சய் மராதே கூறியதாவது-

    பஞ்சாப் தேர்தலில் மக்கள் எங்களுக்கு பெரும்பான்மை அளித்துள்ளனர். இது எங்களுக்கு பொறுப்பு உணர்வை அதிகரிக்க செய்துள்ளது. மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நாங்கள் செயல்படுவோம். பஞ்சாப் தேர்தலில் எங்களை மற்ற கட்சிகள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ஆனால், அவர்களை துடைத்து எறிந்து விட்டோம். எங்களது 10 ஆண்டுகால சேவைக்காக மக்கள் எங்களை ஆதரித்துள்ளார்கள்.

    இதையும் படிங்க - உ.பி.யில் மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடித்தது எப்படி? அரசியல் ஆர்வலர்கள் கூறும் காரணங்கள்
     அடுத்ததாக குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் பங்கேற்போம். இங்கு ஆம் ஆத்மி தனது நிர்வாகிகளை அனுப்பி வைத்து, நிலவரத்தை அறியவுள்ளது. நிச்சயமாக நாங்கள் பெரும் விளைவுகளை ஏற்படுத்துவோம். கடந்த பல ஆண்டுகளாக இந்திய மக்கள் 2 கட்சிகளில் ஒன்றை மட்டும் தேர்வு செய்து வந்தனர். இந்த முறை இரு பெரும் கட்சிகளுக்கும் மாற்று வந்து விட்டது. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

     

    இதையும் படிங்க - பாஜக முதல்வர் வேட்பாளர் பிரமோத் சாவந்த் வெற்றி!

    182 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் இந்தாண்டு டிசம்பரில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2017 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலின்போது, காங்கிரசுக்கு அடுத்தபடியாக ஆம் ஆத்மி கட்சி 2ம் இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த 2022 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக தலித் பிரிவை சேர்ந்த சரண்ஜித் சிங் நிறுத்தப்பட்டிருந்தார். அதற்கு முன்பாக அமரிந்தர்சிங் நீக்கம், சித்து ஏற்படுத்திய பிரச்னை உள்ளிட்டவை காரணமாக காங்கிஸ் கட்சி சற்று தடுமாற்றத்தில் இருந்தது.
    Published by:Musthak
    First published:

    Tags: Arvind Kejriwal, Election 2022

    அடுத்த செய்தி