Home /News /national /

பஞ்சாப்பில் காங்கிரசை பின்னுக்கு தள்ளி வரலாற்று சாதனை படைத்த ஆம் ஆத்மி!!

பஞ்சாப்பில் காங்கிரசை பின்னுக்கு தள்ளி வரலாற்று சாதனை படைத்த ஆம் ஆத்மி!!

பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற கெஜ்ரிவாலின் அறிவிப்பு பெண்களின் வாக்குகளை ஈட்டி கொடுத்துள்ளது.

பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற கெஜ்ரிவாலின் அறிவிப்பு பெண்களின் வாக்குகளை ஈட்டி கொடுத்துள்ளது.

பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற கெஜ்ரிவாலின் அறிவிப்பு பெண்களின் வாக்குகளை ஈட்டி கொடுத்துள்ளது.

    பஞ்சாப்பில் ஆளும் கட்சியான காங்கிரசை பின்னுக்கு தள்ளி ஆம் ஆத்மி கட்சி வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

    பஞ்சாப்பின் வரலாற்றை பின் நோக்கி பார்த்தால் 1966ஆம் ஆண்டு அம்மாநிலம் மறுசீரமைக்கப்பட்டதிலிருந்து அங்கு காங்கிரஸ் மற்றும் சிரோன்மணி அகாளி தளம் கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சியில் இருந்திருக்கின்றன. தற்போது அந்த நடைமுறையை உடைத்திருக்கிறது அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி.

    கட்சியாக உருவெடுத்து பத்து ஆண்டுகளில் இரண்டு மாநிலங்களில் ஆட்சியில் அமர்ந்துள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மியின் வெற்றி முன் கூட்டியே கணிக்கப்பட்டிருந்தாலும், காங்கிரஸ் இந்த அளவிற்கு அதளபாதாளத்திற்கு செல்லும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டு பெரிய கட்சிகளுக்கு வாய்ப்பளித்த மக்கள், விரக்தியடைந்து புதிய கட்சியை தேர்வு செய்திருக்கிறார்கள்.

    இதையும் படிங்க - பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வி!

    இந்த முறை நாங்கள் ஏமாற மாட்டோம், பகவந்த் மான் மற்றும் கெஜ்ரிவாலுக்கு வாய்ப்பு கொடுப்போம் என்ற ஆம் ஆத்மி தொண்டர்களின் tagline மாநிலம் முழுவதும் எதிரொலித்தது. டெல்லியில் 7 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கெஜ்ரிவால், அங்கிருப்பதை போலவே தரமான கல்வி, சுகாதாரம், மின்சாரம் மற்றும் குறைந்த விலையில் நீர் ஆகியவை வழங்கப்படும் என தனது பரப்புரையின் போது உறுதியளித்தார்.

    ஆம் ஆத்மியின் பரப்புரை, பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் பெண்களை மையப்படுத்தியே அமைந்தது. அவரின் ஊழலை ஒழிப்போம் என்ற கோஷம், மாற்றத்திற்காக காத்திருந்த இளைஞர்களை அக்கட்சியின் பக்கம் இழுத்தது. இதேபோல், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற கெஜ்ரிவாலின் அறிவிப்பு பெண்களின் வாக்குகளை ஈட்டி கொடுத்துள்ளது. பெண்களை அவர்களது தந்தை அல்லது கணவர்களின் நீட்சியாக பார்க்காமல், தனி வாக்கு வங்கியாக கருதி அதற்கு ஏற்ப காய்களை நகர்த்திய கெஜ்ரிவால் அதற்கான பலனையும் அடைந்துள்ளார்.

    Also read: தேர்தலுக்குத் தேர்தல் தோல்வி.. காங்கிரஸ் கட்சி கரைந்தது ஏன்?

    முதலமைச்சர் வேட்பாளராக பக்வந்த் மான் அறிவிக்கப்பட்டது, எதிர்க்கட்சிகள் அக்கட்சி மீது வைத்த OUTSIDER என்ற விமர்சனத்தை தகர்த்தது. மேடை நகைச்சுவை கலைஞனான பக்வந்த் மான் ஏற்கெனவே பஞ்சாப் மாநில மக்களின் மனதில் இடம் பிடித்த மண்ணின் மைத்தன். அது மட்டுமல்லாமல் பரப்புரை கூட்டங்களின் போது, எம்பியாக இருந்தும் தன் ஏழ்மை நிலையை மக்களுக்கு உணர்த்த தவறவில்லை. இது அவர் மீதான மதிப்பை மக்கள் மத்தியில் அதிகரித்தது.

    ஆம் ஆத்மியின் பரப்புரை வியூகம், தேர்தல் வாக்குறுதிகள், முதலமைச்சர் வேட்பாளர் என அனைத்து காரணிகளும் அக்கட்சிக்கு சாதகமான நிலையை அளித்திருக்கின்றன. 2017- தேர்தலில் 20 தொகுதிகளை மட்டுமே பெற்ற அக்கட்சி 5 ஆண்டுகளில் 90-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. பஞ்சாப் தேர்தல் வரலாற்றை பார்க்கும் போது, இது வெற்றி அல்ல சுனாமி என கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Aam Aadmi Party, Election 2022, Punjab

    அடுத்த செய்தி