ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஆம் ஆத்மி பொதுக்கூட்டத்தில் சிறுமிக்கு காயம் - பாஜக மீது குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி பொதுக்கூட்டத்தில் சிறுமிக்கு காயம் - பாஜக மீது குற்றச்சாட்டு

காயம் ஏற்பட்ட சிறுமி

காயம் ஏற்பட்ட சிறுமி

குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கட்ட தேர்தலும், டிசம்பர்  ஐந்தாம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும்  நடைபெற உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Gujarat, India

குஜராத்தில் ஆம் ஆத்மி பொதுக்கூட்டத்தில் பாஜகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் சிறுமி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

குஜராத்தில் டிசம்பர் மாதம் இரண்டு கடட்ங்களாக தேர்தல நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக அங்கு ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. டெல்லிக்குப் பிறகு பஞ்சாப்பிலும் ஆட்சியைப் பிடித்துள்ள ஆம் ஆத்மி கட்சி தற்போது குஜராத்தையும் தன் வயப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. அதேபோல் நீண்ட காலமாக ஆட்சியில் இல்லாத காங்கிரசும் அங்கு போட்டியில் இருக்கிறது. இதனால் குஜராத் தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது.

உச்சகட்ட தேர்தல் பரபரப்பில் பாஜக மீது பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ள்து அம்மாநில ஆம் ஆத்மி கட்சி. அக்கட்சியின் குஜராத் மாநில ஒருங்கிணைப்பாளர் கோபால் டாலியா தனது டுவிட்டர் பதிவில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கட்டர்காம் தொகுதியில் நேற்று ஆம் ஆத்மி கட்சியினரின் பொதுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கல்வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் சிறுமி ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. கட்டர்காம் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்பது உறுதியாகத் தெரிந்துவிட்டதால், தோல்வி பயத்தில் பாஜக இது போன்ற அராஜகத்தில் ஈடுபடுவதாக கேபால் டாலிய குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிக்க : காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் மாதம் 5 ஆயிரம் மொபைல் பில் கட்டியிருப்பீர்கள் - பிரதமர் மோடி

மேலும், தங்களது 27 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் பாஜக குஜராத்திற்கு ஏதாவது நல்லது செய்திருந்தால் இப்போது கல்வீசும் தேவை ஏற்பட்டிருக்காது என்றும் கேபால் டாலியா விமர்சித்துள்ளார். பாஜகவினரின் கல்வீச்சு அராஜகத்திற்கு வாக்காளர்கள் துடைப்பத்தால் பதில் சொல்வார்கள் என தங்கள் கட்சியின் சின்னத்தை குறிப்பிட்டு டாலியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கட்ட தேர்தலும், டிசம்பர்  ஐந்தாம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும்  நடைபெற உள்ளது. இந்த இரண்டு கட்ட தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். வாக்குப்பதிவு நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ஆம் ஆத்மி தேர்தலை எதிர்கொண்டு வரும் நிலையில், பாஜக பாதிக்குப் பாதி புது முகங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். புதிய முகங்களால் தங்கள் வெற்றி உறுதியாகும் என்கிற நம்பிக்கையில் பாஜக தேர்தலை எதிர்கொள்கிறது. ஆனால் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது வாக்கு எண்ணும் நாளான டிசம்பர் 8 ஆம் தேதிதான் தெரியும்.

செய்தியாளர் : ரொசாரியோ ராய்

First published:

Tags: Aam Aadmi Party, BJP, Gujarat