ஆம் ஆத்மி எம்.எல்.ஏவைக் கொல்ல முயற்சி : தொண்டர் உயிரிழப்பு

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ நரேஷ்

 • Share this:
  மெஹ்ரெளலி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் நரேஷ் யாதவ் கோவிலுக்குச் சென்று திரும்பும்போது அவரைக் கொல்ல முயற்சி நடத்தப்பட்டது. அவரது வாகனம் மீதான துப்பாக்கிச் சூட்டில் தொண்டர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

  டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வென்ற ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. மெஹ்ரெளலி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் நரேஷ் யாதவ், இரண்டாவது முறையாக வெற்றிபெற்றுள்ளார். இவர், நேற்றிரவு தனது கட்சித் தொண்டர்களுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். கிஷன்கார்க் வழியாக அவரது வாகனம் சென்றுகொண்டிருந்தபோது, அவரது வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். எம்.எல்.ஏ நரேஷ் யாதவ் உயிர்தப்பினார். அவருடன் பயணித்த ஆம் அத்மி தொண்டர் அசோக் மன் என்பவர் மீது துப்பாக்கிக் குண்டு துளைத்து உயிரிழந்தார்.மற்றொரு தொண்டருக்கு காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

  இதுகுறித்துப் பேசியுள்ள நரேஷ் யாதவ் , ”மிகவும் கவலைக்குரிய சம்பவம். தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. போலீஸார் தீவிரமாகவும் உண்மையாகவும் விசாரணை மேற்கொண்டால் இந்தத் தாக்குதலை யார் நடத்தியது என்பது குறித்த உண்மைக வெளிவரும். இந்தத் தாக்குதலில் அசோக் மன் உயிரிழந்துள்ளார். ஹரேந்தர் என்பவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் சென்ற வாகனத்தைக் குறிவைத்துத்தான் அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் நான் உட்பட யார் வேண்டுமானாலும் சுடப்பட்டிருக்கலாம்” என்றார்.
  Published by:Gunavathy
  First published: