ஹோம் /நியூஸ் /இந்தியா /

பாஜகவின் கோட்டையை கைப்பற்றிய ஆம் ஆத்மி.. டெல்லி மாநகராட்சி தேர்தலில் அபார வெற்றி!

பாஜகவின் கோட்டையை கைப்பற்றிய ஆம் ஆத்மி.. டெல்லி மாநகராட்சி தேர்தலில் அபார வெற்றி!

டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி

டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி

வெற்றிக்கு தேவையான பெரும்பான்மை இடங்களை (125) வென்று ஆம் ஆத்மி கட்சி, டெல்லி மாநகராட்சியை தன் வசப்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜகவை பின்னுக்கு தள்ளி ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

250 வார்டுகள் கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த 4ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்தம் 1349 பேர் போட்டியிட்ட நிலையில், 50 சதவீத வாக்குகள் பதிவானது.

மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, 42 மையங்களில் இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. தொடக்கம் முதலே பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இடையே இழுபறி நீடித்து வந்தது.

இதையும் படிக்க :  25 மசோதாக்கள் ப்ளான்.. இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

இந்நிலையில் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளது. ஆம் ஆத்மி 134 வார்டுகளில் வெற்றி பெற்று இருக்கிறது. பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும், சுயேட்சை வேபாளர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

இதன் வெற்றியின் மூலம், ஆம் ஆத்மி கட்சி டெல்லி மாநகராட்சியை தன் வசப்படுத்தியுள்ளது, கடந்த 2007ம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சியை பாஜக நிர்வகித்து வரும் நிலையில், இந்த முறை ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Aam Aadmi Party, BJP, Delhi, Election 2022