ஹோம் /நியூஸ் /இந்தியா /

இனி செல்லபிராணிகளுடனே விமானத்தில் பயணிக்கலாம்..! - ஆகாசா ஏர் நிறுவனம் அசத்தல் அறிவிப்பு

இனி செல்லபிராணிகளுடனே விமானத்தில் பயணிக்கலாம்..! - ஆகாசா ஏர் நிறுவனம் அசத்தல் அறிவிப்பு

இனி உங்கள் செல்லப்பிராணியும் உங்களோடு விமானத்தில் பயணிக்கும்!

இனி உங்கள் செல்லப்பிராணியும் உங்களோடு விமானத்தில் பயணிக்கும்!

முறையான தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலின் கீழ் இதனை மேற்கொள்வதாகவும் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

செல்லப் பிராணிகளுடன் பயணிக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டவர்களுக்கு ஒரு நற்செய்தி வெளியாகியுள்ளது. நவம்பர் 1 முதல், உங்கள் செல்லப்பிராணிகளை உங்கள் பயணித்தில் உடன் அழைத்து செல்லலாம் என்பதுதான் அது. அதன்படி ஆகாசா ஏர் நிறுவனம் செல்லப்பிராணிகளை கேபின் மற்றும் சரக்கு பகுதியில் இனி அனுமதிக்க இருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி, செல்லப்பிராணி மற்றும் கேரியரின் மொத்த எடை 5 கிலோவுக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே ஏர் இந்தியா செல்லப்பிராணிகளை கேபினில் அனுமதிக்கும். ஏர் ஏசியா, விஸ்தாரா, ஸ்பைஸ்ஜெட் மற்றும் இண்டிகோ போன்ற பிற விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் செல்லப்பிராணிகளை அனுமதிப்பதில்லை. இருப்பினும் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்யும் விலங்குகளுக்கு விதிவிலக்குகள் உள்ளன.

தற்போது ஆகாசா ஏர் நிறுவனம் செல்ல பிராணிகளின் எடையை பொருத்து அதை விமானத்தில் ஏற்றிக்கொள்ளும் வரைமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி,

  • ஒவ்வொரு செல்லப் பிராணிக்கும் அவற்றின் சொந்த கூண்டுகளில் எடுத்துச் செல்ல வேண்டும்.
  • கேபினுக்குள் எடுத்து செல்லும் செல்ல பிராணி, கூண்டு அல்லது கேரியர் உட்பட மொத்த எடை வரம்பு 7 கிலோவாக இருக்க வேண்டும்.
  • செக்-இன் வழி எடுத்து செல்லப்படும் செல்ல பிராணிகள் கூண்டு அல்லது கேரியர் உட்பட மொத்த எடை வரம்பு 32 கிலோவாக இருக்க வேண்டும்.
  • கனமான செல்லப்பிராணிகளுக்கு (32-100 கிலோ) சரக்கு முனையத்தில் செக்-இன் செய்ய வேண்டும்.

ரயிலில் பட்டாசு எடுத்து செல்ல தடை! மீறினால் 3 ஆண்டுகள் சிறை !

முறையான தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலின் கீழ் இதனை மேற்கொள்வதாகவும் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. முழு செயல்முறையின் விவரம் விமான நிறுவனத்தால் பகிரப்படும்.

தற்போது ஆகாசா ஏர் தினசரி 30 விமான போக்குவரத்தை இயக்குகிறது. நிதியாண்டின் இறுதிக்குள், மேலும் சில விமானங்களை வாங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது. மார்ச் 2023க்குள், ஆகசா ஏர் 18 விமானங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Flight travel, Pet animals