உத்தவ் தாக்கரேவின் மகன் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

உத்தவ் தாக்கரே

 • Last Updated :
 • Share this:
  உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே மகாராஷ்டிராவின் ஒர்லி தொகுதியில் போட்டியிட்டு 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

  மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலத்தின் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணும் பணி இன்று நடைபெற்று முடிவுகள் வெளியாகி வருகின்றன. மஹாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.

  மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டசபைத் தேர்தல் கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. இதில் ஒர்லி சட்டசபைத் தொகுதியில் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே சிவசேனா சார்பில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுரேஷ் மானோ போட்டியிட்டார்.

  மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. இதில் பாஜக- சிவசேனா கூட்டணி அதிக இடங்களை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. வாக்குகள் எண்ணும் பணி இன்னும் தொடர்ந்து வருகிறது.

  உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே, சுரேஷ் மானேவை விட 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இதன்மூலம் தாக்கரே குடும்பத்தில் இருந்து போட்டியிட்டு தேர்வான முதல் எம்.எல்.ஏ. ஆதித்யா தான்.

  இவரை முதல்வராக்க கட்சி தீவிர முயற்சி எடுத்துவரும் நிலையில், பாஜக அதற்கு இசைவு கொடுக்காமல் இருந்து வருகிறது.

  Published by:Ilavarasan M
  First published: