• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசம் நீட்டிப்பு

ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசம் நீட்டிப்பு

பான் - ஆதார் இணைப்பு

பான் - ஆதார் இணைப்பு

ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அதன்பிறகு, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது. குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்றும் தீர்ப்பளித்தது.

    இதன் பிறகு பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களது பான் எண்-ஐ ஆதார் எண்ணுடன் இணைக்கவேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. பல முறை ஆதார் பான் இணைப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்த மத்திய அரசு இந்த முறை நீட்டிக்காமல் மார்ச் 31-ம் தேதியான இன்றைக்குள் இணைக்க வேண்டும் என உறுதியாக தெரிவித்திருந்தது. இந்தநிலையில், இன்று மதியம் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானவர்கள், INCOME TAX INDIA இணையத்துக்குள் நுழைந்ததால் இணையதளம் முடங்கியது. விரைவில் இணையதளம் சரிசெய்யப்படும் என்று வருமான வரித்துறைதெரிவித்தது. இந்தநிலையில், ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கு ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.

    WWW. INCOME TAX INDIA E-FILING என்ற இணையதளத்தில், பொதுமக்கள் தங்கள் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

    ஆதார் - பான் இணைப்பது எப்படி?

    1. //www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.

    2. Link Aadhaar என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

    3. திரையில் தோன்றும் பக்கத்தில், பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) ஆகியவற்றை டைப் செய்ய வேண்டும்.

    4. ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், I have only year of birth in Aadhaar Card என்பதை டிக் செய்யவும்.

    5. விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்க I agree to validate my Aadhaar details with UIDAI என்பதையும் டிக் செய்யவும்.

    6. Capcha எனப்படும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து அல்லது ஓடிபி பெற்று Link Aadhaar பட்டனை கிளிக் செய்யவும்.

    7. உங்கள் ஆதார்- பான் கார்டு இணைக்கப்பட்டு விடும்.

    ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளதா என்பது உறுதி செய்ய:

    மீண்டும் வருமான வரித்துறையின் இணையதளத்தின் Link Aadhaar பக்கத்திலேயே view status பகுதியை கிளிக் செய்து பான் மற்றும் ஆதார் எண்ணை டைப் செய்து உறுதி செய்து கொள்ள முடியும்.

    ஏற்கெனவே உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டு இருந்தால் Your pan is Linked to Aadhaar Number XXXXXXXX என்ற செய்தி கிடைக்கும்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: