Home /News /national /

ஆதார் முகவரியை புதுப்பிக்கும் வசதியை தற்காலிகமாக நிறுத்திய UIDAI!

ஆதார் முகவரியை புதுப்பிக்கும் வசதியை தற்காலிகமாக நிறுத்திய UIDAI!

aadhar

aadhar

முகவரி மாற்றத்திற்கான புதிய வசதிகள் சரிவர வேலை செய்யவில்லை என அகமது மேமன் என்பவர் சமீபத்தில் ஒரு ட்வீட் செய்திருந்தார்

சமீபத்தில் ஆதார் அட்டைதாரர்களின் வசதிக்காக, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) எந்த ஆதாரத்தையும் சமர்பிக்காமல் ஆதார் அட்டையில் முகவரியை புதுப்பிக்கும் வசதியை அறிமுகப்படுத்தியது.

இதையடுத்து, ஆதார் அட்டையில் முகவரியை மாற்ற இனி எந்தஒரு முகவரி சான்றிதழையும் சமர்ப்பிக்க தேவையில்லை என்று கூறப்பட்டது. நம் தினசரி வாழ்க்கையில் ஆதார் அட்டை எவ்வளவு ஒருங்கிணைந்திருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வசதியை ஆணையம் அறிவித்திருந்தது.

இதன் மூலம், வேறு வீடுகளுக்கு குடிபெயரும் மக்கள் ஆதார் அட்டையில் முகவரியை மாற்றும் நீண்ட செயல்முறை குறித்து இனி கவலைப்படத் தேவையில்லை என்றும், இப்போது ஒரு புதிய வீட்டிற்கு குடிபெயரும் மக்கள் எந்த ஒரு ஆவண சான்றுகளையும் வழங்காமல் UIDAI போர்ட்டல் மூலம் கார்டில் உள்ள முகவரியை எளிதாக புதுப்பிக்க முடியும் எனவும் கூறப்பட்டது.

ALSO READ | தவறாக இமெயில் அனுப்பிவிட்டீர்களா? டெலிட் செய்ய ஈஸி டிப்ஸ்!

இந்த புதிய வசதி மூலம், ஆதார் அட்டைதாரர்கள் முகவரி சரிபார்ப்பின் ஒப்புதல் மற்றும் அங்கீகாரத்துடன் முகவரி மாற்றத்தை மேற்கொள்ளலாம். அதில் முகவரி சரிபார்ப்பவர் ஒரு குடும்ப உறுப்பினராகவோ, உறவினர், நண்பர் அல்லது நில உரிமையாளராகவோ இருக்கலாம்.

அதாவது, ஆதார் அட்டைதாரர் தங்கள் முகவரியை ஆதாரமாக பயன்படுத்த சரிபார்ப்பவர் ஆன்லைனில் அனுமதிக்க வேண்டும். கவனிக்க வேண்டியது என்னவென்றால், குடியிருப்பவர் மற்றும் முகவரி சரிபார்ப்பவர் இருவரும் தங்கள் மொபைல் எண்ணை ஆதாரில் பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது புதுப்பித்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ALSO READ | Jio Fiber மூலம் ஸ்மார்ட் டிவி-யில் உங்கள் மொபைலை பயன்படுத்தி வீடியோ கால் செய்வது எப்படி?

இந்த புதிய அம்சத்திற்கு பிறகு முகவரி மாற்றம் மிக எளிதாகும் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், இந்த அம்சம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சமீபத்தில் UIDAI- வெளியிட்ட ஒரு ட்வீட்-ன் படி இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

முகவரி மாற்றத்திற்கான புதிய வசதிகள் சரிவர வேலை செய்யவில்லை என அகமது மேமன் என்பவர் சமீபத்தில் ஒரு ட்வீட் செய்திருந்தார். அவரது ட்வீட்டுக்கு ஜூன் 14 அன்று பதிலளித்த UIDAI அமைப்பு, "அன்புள்ள குடியிருப்பாளரே, மறு அறிவிப்பு வரும் வரை முகவரி சரிபார்ப்பு கடித வசதி நிறுத்தப்பட்டுள்ளது. பட்டியலில் இருந்து மற்றொரு செல்லுபடியாகும் PoA ஆவணத்தைப் பயன்படுத்தி உங்கள் முகவரி புதுப்பிப்பை தயவுசெய்து கோரவும்" என்று குறிப்பிட்டிருந்தது.

 



 

அறிமுகமான சில நாட்களிலேயே சேவையை முடக்குவது முகவரியை மாற்ற வேறு எந்த ஆவணங்களும் இல்லாதவர்களை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. ஆதார் என்பது UIDAI ஆல் வழங்கப்பட்ட ஒரு தனித்துவமான 12 இலக்க எண் ஆகும். நீங்கள் அதை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.

ALSO READ | வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியவருக்கு தெரியாமல் அதனை பார்ப்பது எப்படி?

இதனால் உங்கள் ஆதார் சரியான ஆதாரத்துடன் இருக்கும். சாதாரணமாக உங்கள் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை ஆஃப்லைன் மற்றும் ஆன்லைனில் உரிய ஆவணத்துடன் புதுப்பிக்கலாம். அவை எப்படி என்பது குறித்து பின்வருமாறு காணலாம்.

1] ssup.uidai.gov.in/ssup/ என்ற அதிகாரபூர்வ UIDAI லிங்கில் உள்நுழைய வேண்டும்.

2] அதில் 'ஆதார் புதுப்பிக்க தொடரவும்' (Proceed to Update Aadhaar) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

3] இப்போது உங்கள் 12 இலக்க UID எண்ணை உள்ளிடவும்

4] பின்னர் உங்களுக்கு வரும் பாதுகாப்பு குறியீடு அல்லது கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்

5] அதன் கீழே உள்ள 'OTP அனுப்பு' (Send OTP') விருப்பத்தை தேர்வு செய்யவும்.

6] இப்போது உங்கள் ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு OTP அனுப்பப்படும்;

7] OTP பெற்ற பிறகு OTP ஐ ஆன்லைன் பக்கத்தில் உள்ளிடவும்

8] 'Login' பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

9] அதில் உங்கள் ஆதார் விவரங்கள் காட்டப்படும். உங்கள் ஐடி மற்றும் முகவரி சான்றுக்கு ஆதரவாக 32 ஆவணங்களில் ஏதேனும் முகவரியை மாற்றவும் மற்றும் ஸ்கேன் நகலை பதிவேற்றி அதனை சமர்ப்பிக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Aadhaar card

அடுத்த செய்தி