• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஆதாரில் மொபைல் எண்ணை மாற்ற/ சேர்க்க ஆவணங்கள் தேவையில்லை - UIDAI அறிவிப்பு..

ஆதாரில் மொபைல் எண்ணை மாற்ற/ சேர்க்க ஆவணங்கள் தேவையில்லை - UIDAI அறிவிப்பு..

ஆதார் கார்ட்

ஆதார் கார்ட்

ஆதார் கார்டில் மொபைல் எண்ணை மாற்றவே அல்லது சேர்க்கவே எந்த ஆவணமும் தேவையில்லை என UIDAI தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

  • Share this:
தனிநபர் அடையாள அட்டையாக விளங்கும் ஆதார் கார்டுகள் மத்திய-மாநில அரசின் அனைத்து வித நலத்திட்ட உதவிகளைப் பெற கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன. வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும், புதிய மொபைல் எண் பெறுவதற்கும், பான் கார்டு வாங்குவதற்கும் ஆதார் அட்டை அவசியமாக உள்ளது. உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் ஆதாரில் இணைக்கப்படாவிட்டால், நீங்கள் ஆதார் எண்ணை சரிபார்க்கவும் முடியாது. 

ஆதார் எண்ணில் மொபைல் எண்ணை இணைப்பது மிக எளிதான ஒன்றுதான். அருகிலுள்ள ஆதார் சேவா கேந்திரா மையங்களுக்கு சென்றும் இணைக்க முடியும். மேலும் உங்கள் ஆதார் அட்டையில் சில திருத்தங்களை வாடிக்கையாளர்களே ஆன்லைனில் செய்துகொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ள நிலையில், சில திருத்தங்கள் ஆதார் மையத்திற்கு சென்று திருத்தம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அப்படி ஆதார் மையத்திற்கு செல்லும் நேரத்தில் ஒரு சில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. 

இந்த நிலையில் உங்கள் ஆதார் அட்டையில் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க, எந்த ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டியதில்லை என UIDAI அமைப்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளது. அந்த ட்விட்டில் "ஆதாரில் மொபைல் எண்ணை சேர்ப்பதற்கு எந்த ஆவணமும் தேவையில்லை. மொபைல் எண்-ஐ சேர்க்க / புதுப்பிக்க அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு உங்கள் ஆதார் கார்டை மட்டும் எடுத்துச் செல்லுங்கள்" என ஆதார் ஆணையம் விளக்கியுள்ளது. 

ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் எந்த ஆவணங்களும் இல்லாமல் புகைப்படம், பயோமெட்ரிக்ஸ், மின்னஞ்சல் ஐடி போன்ற விவரங்களை புதுப்பிக்க முடியும் அம்சம் ஏற்கனவே உள்ள நிலையில் மொபைல் எண்ணைப் புதுப்பிக்கவும் இத்தகைய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

மொபைல் எண் -ஐ ஆதார் அட்டையுடன் இணைப்பதால் கிடைக்கும் நன்மைகள் :  

* ஆதார் நன்மைகள் மற்றும் ஆன்லைன் சேவைகளைப பெற, உங்கள் மொபைல் எண் -ஐ ஆதார் எண்ணுடன் இணைப்பது அவசியமான ஒன்றாகும். 

* நீங்கள் ஆதார் அட்டையில் ஏதேனும் திருத்தங்களைச் செய்ய விரும்பினால், உங்கள் மொபைல் எண்ணை உங்கள் ஆதார் உடன் இணைத்திருக்க வேண்டும்.

* 5 ஜி நெட்வொர்க் சேவையை பெறலாம். 

* கோவிட் - 19 தடுப்பூசி பெறவும் ஆதார் - மொபைல் எண் இணைப்பு அவசியமானதாகும்.  

* உங்கள் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP வழியாக சரிபார்ப்பு செய்யப்பட வேண்டிய இ-ஆதாரின் நகலை நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

ஆதார் சேவா மையத்தில் புதிதாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம், பெயர் புதுப்பிப்பு, முகவரி புதுப்பிப்பு, மொபைல் எண் புதுப்பிப்பு, மின்னஞ்சல் ஐடி புதுப்பிப்பு மற்றும் பிறந்த தேதி (DOB) புதுப்பிப்பு உள்ளிட்டவற்றையும் நீங்கள் எளிதாக மேற்கோளள்லாம். இதற்காக உங்களிடம் ரூ. 50 கட்டணமாக வசூலிக்கப்படும். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: