ஆதார் அட்டை அனைத்து வகையான தேவைகளுக்கும் ஒரு அத்தியாவசிய ஆவணமாகும். வங்கி பரிவர்த்தனைகள் அல்லது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் எதுவாக இருந்தாலும், நீங்கள் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும். புதிய தொலைபேசி இணைப்பைப் பெறுவது முதல் உங்கள் வருமான வரியைத் தாக்கல் செய்வது வரை அனைத்தும் இப்போது ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளன. உங்கள் விவரங்களை சரிபார்க்க ஆதார் கேட்கப்படும். எனவே உங்கள் ஆதார் அட்டையில் அனைத்து விவரங்களையும் சரியாக குறிப்பிடுவது முக்கியம்.
உங்கள் ஆதார் அட்டையில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை ஆதார் சேவை மையத்திற்கு சென்று திருத்திக்கொள்ள முடியும். உங்கள் ஆதார் அட்டையில் உள்ள பெயர், பாலினம் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை ஆன்லைனில் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் முகவரியை மாற்றுவதில் சிக்கல் இருந்த நிலையில் சமீபத்தில் முகவரியை ஆன்லைனில் மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஆதார் ஆணையம் குழந்தைகளுக்கு எளிதாக ஆதார் அட்டை வாங்குவதற்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Also Read: நீங்கள் உடல் எடையை குறைத்தால் மட்டும் போதாது : இந்த 5 விஷயங்களையும் தவறாமல் பின்பற்ற வேண்டும்..!
இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் மட்டும் அல்ல, சிறிய குழந்தைகளுக்கு முதல் கொண்டு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆதார் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் புதிய மாற்றங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஐந்து வயதை எட்டிய குழந்தைகளுக்கான நீல வண்ண ஆதார் அட்டையை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது. அதேபோல பிறந்த பச்சிளம் குழந்தைக்குக் கூட நீங்கள் புதிதாக ஆதார் கார்டு வாங்க முடியும். அதற்கு குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆதார் கார்டு இருந்தால் போதுமானது.
குழந்தைகளுக்கு ஆதார் அட்டை விண்ணப்பிக்கும் முறைகள் :
1: அதிகாரப்பூர்வ UIDAI வலைத்தளத்திற்கு சென்று ஆதார் அட்டை ரெஜிஸ்டர் விருப்பத்தை தேர்வுசெய்க.
படி 2: பின்னர் உங்கள் குழந்தையின் பெயர் போன்ற தேவையான தகவல்களை நீங்கள் நிரப்ப வேண்டும். பெற்றோரின் தொலைபேசி எண் மற்றும் உங்களது பயோமெட்ரிக் தகவல்களை கொடுக்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
3: உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தகவல்களையும் நிரப்ப வேண்டும். குடியிருப்பு முகவரி, இடம், மாநிலம் போன்ற தகவல்களை அளித்து சமர்ப்பிக்க வேண்டும்.
4: இப்போது 'அப்பாயிண்ட்மென்ட்' என்பதை கிளிக் செய்வதன் மூலம் ஆதார் அட்டையை ரெஜிஸ்ட்டர் செய்யலாம்.
Also Read: திருமண வாழ்க்கை சலிப்பு தட்டிவிட்டதா..? இந்த அறிகுறிகளை செக் பண்ணுங்க
5: இதனை தொடர்ந்து உங்களுக்கு அறிவிக்கப்பட்ட தேதியில் அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு சென்று அடையாளச் சான்று (PoI), முகவரி சான்று (PoA), உறவின் சான்று (PoR) மற்றும் பிறந்த தேதி (DoB) உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும்.
6: ஆதார் மையத்திற்கு சென்றதும் அங்குள்ள ஆதார் அதிகாரியிடம் அனைத்து ஆவணங்களையும் சரிபார்க்கவும். குழந்தைக்கு ஐந்து வயது இருந்தால், பயோமெட்ரிக் தரவு எடுக்கப்படும். ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, பயோமெட்ரிக் தரவு தேவையில்லை. ஒரு புகைப்படம் மட்டும் எடுத்து கொள்வார்கள்.
7: மேற்கண்ட நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர் பெற்றோர் தங்கள் விண்ணப்ப எண்ணை பெற்றுக்கொண்டால் போதுமானது. 60 நாட்களுக்குள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் நீங்கள் ஒரு எஸ்எம்எஸ் பெறுவீர்கள், பின்னர் 90 நாட்களுக்குள் ஆதார் கார்டு வந்துசேரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க :
ஆஃப்லைன் பதிவு செய்ய நீங்கள் நேரடியாக ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும்.
1: அனைத்து சரிபார்ப்பு ஆவணங்களையும் உங்களுக்கு அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். அடையாளச் சான்று (PoI), முகவரி சான்று (PoA), உறவின் சான்று (PoR) மற்றும் உங்களது மற்றும் குழந்தையின் பிறந்த தேதி (DoB) ஆவணங்களை எடுத்து செல்லுங்கள்.
2: அங்குள்ள ஆதார் அதிகாரியிடம் இதற்கான படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ளபடி சரிபார்ப்பு முடிந்ததும், ஒப்புதல் பெற்ற 90 நாட்களுக்குள் உங்கள் குழந்தையின் ஆதார் அட்டையை நீங்கள் பெறுவீர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadhar