ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் கார்டு இணைக்கப்படும் - மத்திய அமைச்சர் அறிவிப்பு

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

கட்டாயமாக ஆதார் கார்டை ஓட்டுநர் உரிமத்துடன் இணைக்க வேண்டியது அவசியம். நீங்கள், உங்கள் பெயரை மாற்றிக் கொள்ளலாம். ஆனால், அங்க அடையாளங்களை மாற்ற முடியாது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆதார் கார்டுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய சட்டஅமைச்சர் மற்றும் தகவல் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் கார்ட்டை, தற்போதைய பா.ஜ.க அரசு அனைத்து திட்டங்களுக்கும் கட்டாயப்படுத்திவருகிறது. பஞ்சாபிலுள்ள பல்கலைக்கழகத்தில் பேசிய மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ‘தற்போதுள்ள நடைமுறையில், விபத்தை ஏற்படுத்திய குற்றவாளி போலி ஓட்டுநர் உரிமத்தை வாங்கிக் கொண்டு சுதந்திரமாக இருக்க முடிகிறது.

அதனால், ஓட்டுநர் உரிமத்தை ஆதார் கார்டுடன் இணைக்கும்படி புதிய சட்டம் விரைவில் கொண்டுவரப்படும். அதன்படி, கட்டாயமாக ஆதார் கார்டை ஓட்டுநர் உரிமத்துடன் இணைக்க வேண்டியது அவசியம். நீங்கள், உங்கள் பெயரை மாற்றிக் கொள்ளலாம். ஆனால், அங்க அடையாளங்களை மாற்ற முடியாது.

எனவே, ஆதார் கார்ட்டை இணைத்தப் பிறகு போலி ஆவணங்கள் மூலம் போலியாக ஓட்டுநர் உரிமம் வாங்க முடியாது. டிஜிட்டல் இந்தியா திட்டம் கிராமத்துக்கு நகரத்துக்கும் பாலமாக உள்ளது. டிஜிட்டல் இந்தியா ஆவணங்களின்படி, 123 கோடி பேருக்கு ஆதார் கார்டு உள்ளது. 121 கோடி மொபைல் போன்கள் புழக்கத்தில் உள்ளது. 44.6 கோடி ஸ்மார்ட் போன்கள் உள்ளது. 56 கோடி பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர். இந்திய மக்கள் தொகை 130 கோடி’ என்று தெரிவித்தார்.

Also see:

Published by:Karthick S
First published: