ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஆதார் கார்டு வாங்கி 10 வருஷம் ஆச்சா..! - கட்டாயம் இது செய்யனும் - ஆதார் முகமை அறிவுறுத்தல்

ஆதார் கார்டு வாங்கி 10 வருஷம் ஆச்சா..! - கட்டாயம் இது செய்யனும் - ஆதார் முகமை அறிவுறுத்தல்

ஆதார் அட்டை

ஆதார் அட்டை

2012 இல் எடுக்கப்பட்ட தரவுகளோடு இருக்கும் இந்த ஆதார் அட்டையின் விபரங்களை தற்போதைய நிலைக்கு மேம்படுத்திக் கொள்ள ஆதார் அட்டை முகமம் வாய்ப்பளிக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட இந்திய அரசாங்கத்தால் ஜனவரி 2009 இல் நிறுவப்பட்ட சட்டப்பூர்வ ஆணையமான இந்திய தனித்துவ அடையாள ஆணையம்  (UIDAI) .

ஆதார் விதிகளின் கீழ் இந்தியாவில் உள்ள மக்களுக்கு தனித்துவமான 12 இலக்க எண்கொண்ட ஆதார் அட்டை வழங்கப்பட்டது. அரசின் திட்ட நிதிகள், பிற மானியங்கள், நன்மைகள் மற்றும் சேவைகள் சட்டம், 2016 மூலம் இந்த ஆதார் எண்கொண்ட மக்களுக்கு அரசின் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

2012 இல் எடுக்கப்பட்ட தரவுகளோடு இருக்கும் இந்த ஆதார் அட்டையின் விபரங்களை தற்போதைய நிலைக்கு மேம்படுத்திக் கொள்ள ஆதார் அட்டை முகமம் மக்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கிறது.

பூமிக்கு வர காசுஇல்லை.. ஜப்பான் பாட்டிக்கு காதல் வலை - 24 லட்சத்தை சுருட்டிய போலி விண்வெளி வீரர்

10 ஆண்டுகளுக்கு முன் தனித்த ஆதார் அடையாள எண் பெற்று இதுவரை புதிய விவரம் எதுவும் சேர்க்காதவர்கள் உடனடியாக அந்த விவரங்களை சேர்த்துக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் எண்களை வழங்கும் அரசு முகமை (யு.ஐ.டிஏ.ஐ.) நேற்று வெளியிட்ட அறிக்கையில் இதை தெரிவித்துள்ளது.

தற்போதைய விவரங்களை இணைக்காதவர்கள், தங்களின் வேறு அடையாள அட்டை, இருப்பிடச் சான்றுகளை உரிய கட்டணம் செலுத்தி இணைத்து கொள்ளலாம். https://uidai.gov.in/en/my-aadhaar/update-aadhaar.html இணையதளம் மூலமாகவோ அல்லது அருகில் உள்ள ஆதார் மையம் மூலமாகவோ இதை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், புதிய விவரங்களை சேர்ப்பது கட்டாயம் என்று தெரிவிக்கப்படவில்லை.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Aadhar, New updates