முகப்பு /செய்தி /இந்தியா / இன்ஸ்டா மூலம் பழகி இளம்பெண்ணிடம் ‘நைசாக’ பேசி ரூ.15 லட்சம் ஏமாற்றிய நபர்… நடந்தது என்ன?

இன்ஸ்டா மூலம் பழகி இளம்பெண்ணிடம் ‘நைசாக’ பேசி ரூ.15 லட்சம் ஏமாற்றிய நபர்… நடந்தது என்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

மும்பையைச் சேர்ந்த இளம்பெண் ஆன்லைன் மோசடியில் 15 லட்ச ரூபாயை இழந்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் ஆய்வக வல்லுநராக பணியாற்றிவருகிறார். அவருக்கு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு இளைஞருடன் பழக்கம் உண்டாகியுள்ளது. அவர், தன்னை சிரியாவிலுள்ள ராணுவ முகாமில் பணி செய்வதாக கூறியுள்ளார். நாளடைவில் அந்த இளைஞர், தனக்கென்று உறவினர்கள் யாரும் கிடையாது தன்னுடைய நகை மற்றும் பணத்தை பெண்ணுக்கு அனுப்பிகிறேன். அதனை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதனை இந்த இளம் பெண் நம்பியுள்ளார். மேலும், அந்த இளைஞர், வெளிநாட்டிலிந்து அனுப்புவதால் சுங்க வரி செலுத்த வேண்டியுள்ளது என்று கூறி பெண்ணிடம் பணம் கேட்டுள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக 15 லட்ச ரூபாய் வரை பெண்ணிடம் பணத்தைப் பெற்றுள்ளார். அதன்பிறகு ஒரு பத்து லட்ச ரூபாயை இளைஞர் கேட்கும்போது இவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Also Read : ‘எங்கடா அந்த மதுரவாயல்’ என தேடும் வட மாநிலத்தவர்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பணத்தைக் கொடுக்காமல் ஏற்கெனவே கொடுத்தப் பணத்தை இளம் பெண் கேட்டுள்ளார். அதன்பிறகு அந்த இளைஞர் மெசேஜ் அனுப்புவதை நிறுத்திவிட்டார்’ என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக மும்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

First published:

Tags: Cyber crime