ஹோம் /நியூஸ் /இந்தியா /

பக்கத்து வீட்டு சிறுவனை கடத்தி மாமாவிற்கு பரிசளித்த இளைஞர்...டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்..!

பக்கத்து வீட்டு சிறுவனை கடத்தி மாமாவிற்கு பரிசளித்த இளைஞர்...டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சிறுவனின் மாமாவிற்கு நான்கு மகன்கள் பிறந்தும் அவர்கள் யாரும் உயிர்பிழைக்காத காரணத்தினால் அவருக்கு பரிசளிக்க விரும்பி குழந்தையை அந்த இளைஞர் கடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

தலைநகர் டெல்லியில் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். சிறுவனின் தந்தை மகனை தேடி சென்ற போது அவன் அங்கே இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சிறுவனை தேடும் பணியில் இறங்கிய போலீசார், சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த பகுதியை சுற்றி விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது சிறுவன் காணாமல் போன அதே நாளில் அண்மையில் வசிக்கும் நீரஜ் என்ற இளைஞரும் வீட்டிலிருந்து வெளியேறியது தெரிய வந்துள்ளது. அவர் அடுத்த நாள் காலை வரை வீட்டிற்கு திரும்பாததால் சந்தேகமடைந்த போலீசார் அவரை தேடினர்.

இந்த நிலையில்தான் அந்த இளைஞர் குழந்தையை அலிகாரில் உள்ள தனது மாமா வீட்டிற்கு கடத்திச் சென்றது தெரிய வந்தது. அவரது தாய் மாமா சுனித் பாபுவின் வீட்டிற்கு சென்று காவல் துறையினர் குழந்தையை மீட்டு அந்த இளைஞரை கைது செய்தனர்.

இது தொடர்பாக பேசிய காவல்துறை துணை ஆணையர் ஈஷா பாண்டே ” சிறுவனின் மாமாவிற்கு நான்கு மகன்கள் பிறந்தும் அவர்கள் உயிரிழந்துவிட்டனர். இதனால் அவருக்கு பரிசளிக்க விரும்பி குழந்தையை அந்த இளைஞர் கடத்தியுள்ளார்” எனத்  தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Baby kidnaped, Delhi