ஹோம் /நியூஸ் /இந்தியா /

IRCTC Vikalp Scheme: இனி வெயிட்டிங் லிஸ்ட் தொல்லை இல்லை; ஐஆர்டிசியின் அதிரடி திட்டம்!

IRCTC Vikalp Scheme: இனி வெயிட்டிங் லிஸ்ட் தொல்லை இல்லை; ஐஆர்டிசியின் அதிரடி திட்டம்!

ஐஆர்சிடிசி

ஐஆர்சிடிசி

காத்திருப்பில் இருக்கும் பயணிகளுக்கு மாற்று ரயிலை தந்தப்பின் முன்பதிவு செய்த ரயிலில் ஏறக் கூடாது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  நாடு முழுவதும் விரைவில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை நாட்களைப் பொறுத்தவரை வேலைக்காக வெளியூர் அல்லது வெளிமாநிலங்களுக்குச் சென்றுள்ள பெரும்பாலான நபர்களுக்கும், சொந்த ஊர் திரும்புவது வழக்கம். அப்படி பண்டிகை கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்களின் முதல் விருப்பமாக ரயில் பயணம் உள்ளது. பண்டிகை நேரத்தில் இந்தியன் ரயில்வே என்ன தான் சிறப்பு ரயில்களை இயக்கினாலும் கன்பார்ம் செய்யப்பட்ட டிக்கெட்கள் கிடைப்பது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

  எனவே சிறப்பு ரயில்களை மட்டுமின்றி, மேம்படுத்தப்பட்ட வசதியுடன் கூடிய விகல்ப் திட்டத்தையும் இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

  மாதிரிப்படம்

  விகல்ப் திட்டம் என்றால் என்ன?

  2015ம் ஆண்டு இந்திய ரயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்ட விகல்ப் திட்டம் மூலமாக, இனி எந்த பயணியும் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு, காத்திருப்பு பட்டியலில் இருக்க வேண்டிய நிலை மாற்றப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த ரயிலில் டிக்கெட் உறுதியாகவில்லை என்றால், அதே மார்க்கத்தில் ஓடும் அடுத்த ரயிலில் டிக்கெட் உறுதி செய்யப்படும். அதாவது பயணிகள் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் போது, விகல்ப் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யும் பட்சத்தில் அதே மார்க்கத்தில் செல்லக்கூடிய மற்றொரு ரயிலில் கம்பார்ம் டிக்கெட் கிடைக்கும். இத்துடன் பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு உறுதியானது தொடர்பான குறுச்செய்தியும் கிடைக்கும்.

  விகல்ப் திட்டத்தின் நிறை; குறைகள்:

  பயணிகளின் சிரமத்தை குறைக்க மத்திய அரசு கொண்டுவந்துள்ள இத்திட்டத்தின் முழு பலனையும் அடைய வேண்டும் என்றால், விகல்ப் ரயில்வே டிக்கெட் கவுன்டரில் முன்பதிவு செய்வது நல்லது. ஏனெனில் டிக்கெட் கவுன்டர்களில் முன்பதிவு செய்யப்படும் விகல்ப் டிக்கெட் உறுதி செய்யப்பட்டாலும் சரி, இல்லை என்றாலும் சரி பயணிகள் குறிப்பிட்ட வழித்தடத்தில் செல்லக்கூடிய எந்த ரயிலிலும் பயணிக்க முடியும்.

  ஆனால் விகல்ப் திட்டத்தின் கீழ், ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படும் முன்பதிவு டிக்கெட் உறுதியானால் மட்டுமே பயணம் செய்ய முடியும். ஏனெனில் ஆன்லைன் மூலம் உறுதி செய்யப்படாத டிக்கெட்கள் காத்திருப்பு பட்டியலில் இருந்து ரத்து செய்யப்படும் வாய்ப்புள்ளது.

  விகல்ப் திட்டத்தின் கீழ் பயணிகள் மொத்தமாக 7 ரயில்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

  விகல்ப் ஆப்ஷனை தேர்வு செய்தால், மாற்று ரயிலில் காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு உறுதியாக டிக்கெட் வழங்கப்படும் எனக்கூற முடியாது. ஏனெனில் இது ரயில் மற்றும் அதில் காலியாக உள்ள டிக்கெட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடக்கூடியது.

  அதேபோல் எந்த ரயில் மற்றும் வகுப்புகளிலும் பயணிக்க தயாராக இருக்கும் பயணிகளுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். முன்பதிவு ஒதுக்கீடு மற்றும் சலுகையைப் பொருட்படுத்தாமல் காத்திருப்பு பட்டியலில் உள்ள அனைத்து பயணிகளும் இத்திட்டத்தின் கீழ் பலன் பெறலாம்.

  காத்திருப்புப் பட்டியலிடப்பட்டுள்ள டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்ட அசல் ரயிலின் புறப்பாடு நேரத்திற்கு 30 நிமிடங்கள் முதல் 72 மணி நேரங்கள் வரை மாற்று ரயிலுக்கான தேர்வை பயணிகள் மேற்கொள்ளலாம்.

  விகல்ப் திட்டத்தின் கீழ் புக் செய்யும் பயணிகளுக்கு மாற்று ரயிலில் பெர்த் வழங்க பயணிகளிடம் எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. அதேபோல் கட்டண வித்தியாசத்திற்கான பணமும் பயணிகளுக்கு திரும்ப வழங்கப்படாது.

  காத்திருப்பில் இருக்கும் பயணிகளுக்கு மாற்று ரயிலை தந்தப்பின் முன்பதிவு செய்த ரயிலில் ஏறக் கூடாது.

  விகல்ப் திட்டத்தில் டிக்கெட் முன்பதிவை செக் செய்வது எப்படி?

  டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது, ​​விகல்ப் ஆப்ஷன் இடம் பெற்றிருப்பதை பாருங்கள். சில சமயங்களில் குறிப்பிட்ட ரயிலில் டிக்கெட்டுக்கள் காலியாக இருந்தால் தானாகவே விகல்ப் ஆப்ஷன் தேர்வு செய்யப்படும்.

  விகல்ப் திட்டம் குறித்த வழிகாட்டுதல்களுடன் கூடிய டைலாக் பாக்ஸ் திரையில் தோன்றும் அதில் உங்களுடைய பிஎன்ஆர் எண்ணை டைப் செய்வதன் மூலமாக காத்திருப்பு பட்டியலில் இருந்து மாற்று ரயிலில் இடம் கிடைத்துள்ளதா? என்பதை அறியலாம்.

  Read More: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை எதிரொலி : இருமல் மருந்துகளை ஆய்வகத்திற்கு அனுப்பிய மத்திய அரசு!

  ஆன்லைன் மூலம் செக் செய்ய முடியாதவர்கள் 139 என்ற எண் மூலமாக கால் சென்டருக்கோ, www.indianrail.gov.in என்ற இணைய விசாரணை மூலமாகவே தகவல்களை அறியலாம்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Indian Railways, IRCTC