ஹோம் /நியூஸ் /இந்தியா /

கான்வாய் வாகனத்த ஓரமா நிறுத்துங்க... ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டு காரை நிறுத்திய பிரதமர் மோடி - வைரலாகும் வீடியோ

கான்வாய் வாகனத்த ஓரமா நிறுத்துங்க... ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டு காரை நிறுத்திய பிரதமர் மோடி - வைரலாகும் வீடியோ

ஆம்புலன்ஸ்கு வழிவிட்ட பிரதமர் மோடி

ஆம்புலன்ஸ்கு வழிவிட்ட பிரதமர் மோடி

ஆம்புலன்ஸ்கு வழிவிட்டு சாலையில் விலகி நின்ற பிரதமரின் வாகனங்களின் வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்டு வைரலாகி வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Gujarat, India

  அகமதாபாத்திலிருந்து காந்திநகர் சென்று கொண்டிருந்த போது பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனங்கள் அந்த வழியில் சென்ற ஆம்புலன்ஸ்கு வழிவிட்டு சாலையில் விலகி நின்ற வீடியோ குஜராத் மாநில பாஜக- வால் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

  பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் மேம்பாட்டுத் திட்டப் பணிகளைத் தொடங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அங்கு இருந்து காந்திநகரில் இருக்கும் ராஜ் பவனுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியில் ஆம்புலன்ஸ் ஒன்று வந்ததுள்ளது.

  இந்த நிலையில் பிரதமரின் அறிவுரைப்படி ஆம்புலன்ஸ்கு பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள் சாலையின் ஓரம் சிறிது நேரம் நிருத்தி வழிவிட்டனர். அந்த காணொளியைக் குஜராத் மாநில பாரத ஜானத கட்சி தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

  Also Read : பள்ளி மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியர்.. கருப்பு மை பூசி, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்திய மக்கள்

  அந்த காணொளியில் ஆம்புலன்ஸ்கு வழிவிட்டு பிரதமர் வாகனம் நின்று அதன் பின்னர் செல்வது தெரிகிறது. குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி காந்திநகர்-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அதிவேக ரயிலைக் கொடி அசைத்துத் தொடங்கி வைத்துள்ளார் மற்றும் அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்ட பணிகளைத் தொடங்கி வைத்துள்ளார்.

  Published by:Janvi
  First published:

  Tags: Ambulance, Gujarat, PM Modi