ஹோம் /நியூஸ் /இந்தியா /

டியூஷனுக்கு சென்ற மாணவன்... மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த டீச்சர் போக்சோவில் கைது!

டியூஷனுக்கு சென்ற மாணவன்... மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த டீச்சர் போக்சோவில் கைது!

மாதிரி படம்

மாதிரி படம்

அந்த சிறுவன் மன ரீதியாக பாதிக்கப்பட்டு, சரிவர படிக்காமல் இருந்துள்ளான். அந்த சிறுவனின் நடவடிக்கையில் மாற்றத்தை கண்ட பெற்றொர், இதை பற்றி பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kerala, India

  கேரளா மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவனை அவரின் டியூஷன் டீச்சர் மது கொடுத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

  திரிச்சூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் 9ஆம் வகுப்பு படித்து வருகிறான். கொரோனா காலத்தில் அதேபகுதியை சேர்ந்த 34 வயது பெண்ணிடம் டியூஷன் படிக்க சென்றுள்ளான். கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்த அந்த பெண், இதற்கு முன் ஜிம் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

  கொரோனா காலத்தில் டியூஷன் வகுப்புகளை எடுத்து வந்த அந்த டியூஷன் டீச்சர், தனது வீட்டிற்கு படிக்க வந்த அந்த 16 வயது சிறுவனுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறிது நாட்களில், அந்த சிறுவன் மன ரீதியாக பாதிக்கப்பட்டு, சரிவர படிக்காமல் இருந்துள்ளான். அந்த சிறுவனின் நடவடிக்கையில் மாற்றத்தை கண்ட பெற்றொர், இதை பற்றி பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.

  இதையும் படிக்க : வீடியோ ரெக்கார்ட் செய்து பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. பாய்ந்த போக்சோ!

  பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் அந்த மாணவனிடம் விசாரித்தனர். இதை தொடர்ந்து அந்த சிறுவனை மனநல ஆலோசகரிடம் அழைத்து சென்றனர். அங்கே தான் அந்த சிறுவன் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளான். ஆந்த ஆசிரியர் மாணவனுக்கு மது கொடுத்து மயக்கமடைய செய்து, பல முறை அவருக்கு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.

  இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றொர், போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார், டியூஷன் டீச்சரை போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த 28 ஆம் தேதி கைது செய்தனர்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Kerala, Pocso, Sexual harassment, Teacher