ஸ்புட்னிக் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ரஷ்யாவிற்கு சுற்றுலா செல்லலாம்: அட்டகாசமான தடுப்பூசி சுற்றுலா திட்டம்!

ரஷ்யா சுற்றுலா

கொரோனா காலத்தில் சுற்றுலாவை மேம்படுத்தவும், மக்களை தடுப்பூசி செலுத்தி கொள்ள ஊக்குவிக்கும் வகையிலும் இந்த சுற்றுலா திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
இந்த கொரோனா காலத்தில், வீடுகளில் முடங்கி இருக்காமல், சுற்றுலா செல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இந்தியர்கள், இந்த கொரோனா காலத்தில் ரஷ்யாவிற்கு வந்து சுற்றி பார்க்கும் விதமாக தடுப்பூசி சுற்றுலா திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதால், இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு சுற்றுலா செல்லவோ அல்லது பணி நிமித்தமாக செல்வதற்கோ கூட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், ரஷ்யா அதில் இருந்து சற்று மாறுபட்டு, இந்தியர்கள் ரஷ்யாவில் சுற்றுலா பயணிகளாக வரலாம், வந்து ரஷ்யாவை சுற்றி பார்க்கலாம் என்று அறிவித்துள்ளது.

ரஷ்யா சுற்றுலா


இந்த பயணத்திற்கு A TRIP TO VACCINATION & HAPPINESS என்று பெயரிட்டுள்ளது. 24 நாட்கள் ரஷ்யாவில் சுற்று பயணம் மேற்கொள்ள, தனிநபர் ஒருவருக்கு இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து புறப்பட்டது முதல் மீண்டும் டெல்லி வந்து சேரும் வரை, அனைத்து செலவுகளும் இந்த ஒரு லட்சத்து 29 ஆயிரம் ரூபாயில் அடங்கிவிடுகிறது. செலுத்தப்படும் இந்த தொகையில், விமான கட்டணமும் அடக்கம்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இறங்கிய உடன், 20 நாட்கள் மாஸ்கோவில் தங்குவதற்கு தகுந்தாற்போல், அங்கு ஒரு 3 ஸ்டார் ஹோட்டலில் தங்குமிடம் ஏற்பாடு செய்து தரப்படும்.

ரஷ்யா சுற்றுலா


3 நாட்கள் மாஸ்கோவின் முக்கிய இடங்களை சுற்றிப்பார்க்க, மொழி பெயர்பாளர்களுடன் வாகனங்களும் ஏற்பாடு செய்து தரப்படும். பின்னர், மாஸ்கோவில் இருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பீட்டர்ஸ்பர்க் நகரில், 3 நாட்கள் சுற்றுலா தளங்களை சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யப்படுகிறது.  பீட்டர்ஸ்பர்க் நகரில் 4 நாட்கள் தங்குவதற்காக, 3 ஸ்டார் ஹோட்டலில் தங்குமிடம் ஏற்பட்டு செய்து தரப்படுகிறது. மேலும் மாஸ்கோவில் இருந்து பீட்டஸ்பர்க் சென்றுவிட்டு மீண்டும் மாஸ்கோ வந்து சேர்வதற்கான ரயில் டிக்கெட் இந்த கட்டணத்தில் அடங்கும்.

சுற்றுலா செல்லக்கூடிய இந்த 24 நாட்களும் காலை உணவு மற்றும் இரவு உணவுக்கு ஏற்பட்டு செய்யப்படும். அதுவும் இரவு உணவு இந்திய உணவாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை போக, ரஷ்யா செல்ல தேவையான விசாவை பெறுவதற்கு தேவையான ஆலோசனை மற்றும் உதவிகள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி, ஒரு தனிநபர் தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றாற்போல் அங்கு செய்யும் செலவுகளுக்கு மட்டும் தான் பணம் தேவைப்படும் என்பது இந்த சுற்றுலாவின் சாராம்சம்.

ARABIAN NIGHTS TOURS


ஆனால் இந்த சுற்றுலா செல்ல வேண்டும் என்றால், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை 2 டோஸ் எடுத்து கொள்ள வேண்டும். அதுவும் இந்த கட்டணத்தில் வந்துவிடும் என்றாலும், கொரோனா காலத்தில் சுற்றுலாவை மேம்படுத்தவும், மக்களை தடுப்பூசி செலுத்தி கொள்ள ஊக்குவிக்கும் வகையிலும் இந்த சுற்றுலா திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 15ம் தேதி 30 பேர் இந்தியாவில் இருந்து ரஷ்யா சென்றுள்ளனர், அடுத்த குழு வரும் 29ம் தேதி ரஷ்யாவிற்கு சுற்றுலா செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது. ARABIAN NIGHTS TOURS என்ற சுற்றுலா ஏற்பாடு செய்யும் நிறுவனம் இந்த சுற்றுலாவை ஏற்பாடு செய்கிறது.

 
Published by:Arun
First published: