16 வயது சிறுமிக்கு இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை - தந்தை உள்பட 5 பேர் கைது

கேரளாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அந்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

news18
Updated: December 6, 2018, 7:07 PM IST
16 வயது சிறுமிக்கு இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை - தந்தை உள்பட 5 பேர் கைது
சிறுமி
news18
Updated: December 6, 2018, 7:07 PM IST
கேரளாவில் இரண்டு ஆண்டுகளாக 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் சிறுமியின் தந்தை உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளா மாநிலம் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியின் தாய் காவல்நிலையத்தில் அவர் மகள் பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்று புகார் அளித்தார். அந்த புகார் மனுவில், அவரது மகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக சொந்த தந்தையால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும், நான்கு இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் கேரள காவல்துறையினர், அச்சிறுமியின் தந்தை உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்துள்ளனர். இதுகுறித்து நியூஸ் 18-க்கு தெரிவித்த காவல்துறை அதிகாரிகள், “20-க்கும் மேற்பட்டவர்கள் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருடைய தந்தையால் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக சிறுமி குறிப்பிட்டுள்ளார். நவம்பர் மாதம் நான்கு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த நான்கு பேரில் ஒருவர் சமூக வலைதளம் மூலம் நண்பராகியுள்ளார். மீதி மூன்று பேரும் அவனுடைய நண்பர்கள்” என்று தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி, இளைஞர்களால் மிரட்டப்படுவதை அறிந்த சிறுமியின் சகோதரர் தாயிடம் கூறியதையடுத்து, இந்த விவகாரம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக எட்டுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சிறுமியின் தந்தை உள்ளிட்ட ஐந்து பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

மேலும் பார்க்க: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து கவுதம் காம்பீர் ஓய்வு - வீடியோ

First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...