Home /News /national /

கல்லூரி கட்டணத்தை செலுத்தினால்தான் சான்றிதழ்! - கூலி வேலைக்கு சென்ற மாணவி

கல்லூரி கட்டணத்தை செலுத்தினால்தான் சான்றிதழ்! - கூலி வேலைக்கு சென்ற மாணவி

ரோஸி

ரோஸி

எனது தங்கை பி.டெக் படித்து வருகிறார். எனினும், எனது கல்வி கட்டணத்தை செலுத்துவதற்கு உதவி செய்யும் வகையில் எங்களுடன் கூலி வேலைக்கு வருகிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி மாவட்டத்தின் கோரடிபிதா (Goradipidha) கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஸி பெஹேரா. மிகவும் ஏழ்மையான சூழலில் படித்து வளர்ந்த இவர் தனது கல்லூரி கட்டணத்தைச் செலுத்த முடியாமல் கடந்த சில வருடங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தினசரி கூலியாக பணியாற்றி வருகிறார். இதில் கிடைக்கும் வருமானத்தை தனது கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்திற்காக சேமித்து வருகிறார்.

    ரோஸி இதுதொடர்பாக ஊடகங்களிடம் பேசும்போது, “நான் கடந்த 2019-ம் ஆண்டு என்னுடைய டிப்ளமோ படிப்பை நிறைவு செய்துவிட்டேன். ஆனால், என்னால் கல்லூரிக்க செலுத்த வேண்டிய ரூ 24,500-ஐ செலுத்த முடியவில்லை. இதனால், கல்லூரியிடம் இருந்து கல்விச் சான்றிதழைப் பெற முடியவில்லை. என்னால், இளங்கலை படிப்பை தொடரவும் நிதி ஏற்பாடு செய்ய முடியவில்லை” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். ரோஸி பட்டியல் பிரிவைச் சேர்ந்த பெண் என்பதால் அவரது கல்விக் கட்டணத்தை அரசு ஏற்றதாகவும் ஆனால், விடுதி மற்றும் பேருந்து கட்டணத்தை ஏற்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய ரோஸி,  “கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் எங்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் பலமுறை இதுதொடர்பாக கோரிக்கை விடுத்தேன். எனினும், கல்லூரி நிர்வாகம் சான்றிதழை அளிக்க மறுத்துவிட்டது. கல்லூரியில் கட்டணங்களை செலுத்த வேறு வழி எனக்கு தெரியவில்லை. என்னுடைய வீடு கூட அரசாங்க நிலத்தில்தான் கட்டப்பட்டுள்ளது. நல்ல மதிப்பெண்களுடன் மெட்ரிக் தேர்ச்சி பெற்றதால் அரசாங்க உதவியுடன் கல்லூரியில் சேர்ந்து படிப்பைத் தொடங்கினேன்” என்று கூறியுள்ளார்.

    கல்லூரிக்கு தேவையான பணத்தை சம்பாதிக்க ரோஸி தனது பெற்றோர், சகோதரிகள் மற்றும் தாத்தாவுடன் இணைந்து கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.  “எனது தங்கை பி.டெக் படித்து வருகிறார். எனினும், எனது கல்வி கட்டணத்தை செலுத்துவதற்கு உதவி செய்யும் வகையில் எங்களுடன் கூலி வேலைக்கு வருகிறார். எங்களது ஊதியம் இணைந்து பிரச்னையை தீர்க்கும் என நினைக்கிறேன். ஆனால், தொடர்ந்து மேல் படிப்பிற்கு அதிக பணத்தை ஏற்பாடு செய்ய வேண்டியது உள்ளது” என்றும் ஊடகங்களிடம் பேசியுள்ளார் ரோஸி.

    ரோஸியின் மோசமான நிதி நிலைமையை அறிந்த நடிகை ராணி பாண்டா என்பவர் அவருக்கு நிதியுதவி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த செய்தியை அறிந்த டெலாங் பிளாக் விரிவாக்க அதிகாரி ஷேஷ்தேவ் ராவுத், “தன்னுடைய வறுமையான சூழ்நிலையால் ரோஸியால் கல்லூரி கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இதனால், அவருக்கு டிப்ளமோ சான்றிதழை கல்லூரி நிர்வாகம் வழங்கவில்லை. இந்த பிரச்னை தொடர்பான விசாரணையை நாங்கள் மேற்கொள்வோம். அவருக்கு தேவையான உதவிகளை செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
    Published by:Ram Sankar
    First published:

    Tags: Education, Odisha

    அடுத்த செய்தி