• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சிறுமியின் கழுத்தை சுற்றிய பாம்பு.. 2மணிநேர போராட்டம் - சிகிச்சையில் உயிர்பிழைப்பு

சிறுமியின் கழுத்தை சுற்றிய பாம்பு.. 2மணிநேர போராட்டம் - சிகிச்சையில் உயிர்பிழைப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கழுத்தில் சுற்றிய பாம்பு சிறுமியை கடித்த சம்பவத்தில் நான்கு நாள் சிகிச்சைக்கு பிறகு சிறுமி அபாய கட்டத்தை தாண்டியுள்ளார்.

  • Share this:
    மகாராஷ்ட்ராவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த சிறுமியின் கழுத்தை சுற்றிய பாம்பு அவரை கடித்துவிட்டது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி அபாயகட்டத்தை தாண்டியுள்ளார்.

    மகாராஷ்ட்ரா மாநிலம் வார்தாவைச் சேர்ந்த 6 வயதுச்சிறுமி தனது தாயுடன் வீட்டில் இரவு உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவர்களது வீட்டிற்குள் நுழைந்த நாகப்பாம்பு ஒன்று சிறுமிக்கு அருகில் ஊர்ந்து வந்து சிறுமியின் கழுத்தை சுற்றிக்கொண்டது. இதனையடுத்து சிறுமி சத்தம்போட்டுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அவரது தாய் கண்விழித்துப்பார்த்துள்ளார். சிறுமியின் கழுத்தில் நாகப்பாம்பு சுற்றியிருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்துவிட்டனர்.

    Also Read: எங்க ஊருக்கு ரோடும், பஸ்ஸூம் வந்தால் தான் கல்யாணம் – முதல்வருக்கு கடிதம் எழுதிய இளம்பெண்

    சிறுமியின் காப்பாற்ற நினைத்து அருகில் நெருங்கினால் பாம்பு சிறுமியை தீண்டி அவளது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என குடும்பத்தினர் அஞ்சினர். இதனையடுத்து பாம்பு பிடிக்கும் நபர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமியை அசையாமல் இருக்கமாறு அறிவுறுத்தியுள்ளனர். சுமார் 2 மணிநேரம் சிறுமி கொஞ்சமும் அசையாமல் பயத்துடன் அப்படியே படுத்திருந்தார்.

    பாம்பு சிறுமியின் கழுத்தில் இருந்து மெல்ல தன்னை விடுவித்தது. அப்போது பயத்தின் காரணமாக சிறுமி கொஞ்சம் அசைந்ததால் அவரது கையில் பாம்பு கொத்தியது. இதனையடுத்து கொஞ்சமும் தாமதிக்காமல் சிறுமியை மீட்ட கிராமத்தினர். பாம்பையும் பிடித்தனர். சிறுமி உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுமி நான்கு நாள்களுக்கு பிறகு அபாய கட்டத்தை தாண்டியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: