’பாகுபாட்டை சுட்டிக்காட்ட நினைத்தேன்..’ - மகள் பிறந்த மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முடிவெட்டிய சலூன்காரர்..

’பாகுபாட்டை சுட்டிக்காட்ட நினைத்தேன்..’ - மகள் பிறந்த மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முடிவெட்டிய சலூன்காரர்..

மகள் பிறந்ததையொட்டி, குவாலியைரைச் சேர்ந்த சலூன்கடை உரிமையாளர் ஒருநாள் முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முடிவெட்டியுள்ளார்.

மகள் பிறந்ததையொட்டி, குவாலியைரைச் சேர்ந்த சலூன்கடை உரிமையாளர் ஒருநாள் முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முடிவெட்டியுள்ளார்.

  • Share this:
குழந்தை பிறக்கும் நாள் என்பது அனைவருக்கும் ஸ்பெஷலான நாளாக இருக்கும். ஒரு சிலர் குடும்பத்தினருடன் கொண்டாடுவார்கள். பெரும்பாலானோர் குழந்தையின் வருகையை உறவுகள், நண்பர்கள் படைசூழ கொண்டாடி மகிழ்வார்கள். இன்னும் சிலர் அந்தநாளை வித்தியாசமாக கொண்டாட திட்டமிட்டு ஏழைகளுக்கும், ஆதரவற்றோர்களுக்கும் உணவுகளையும், உடைகளையும் வாங்கிக்கொடுத்து மகிழ்வார்கள்.

மத்தியபிரதேச மாநிலம், குவாலியரைச் சேர்ந்த சலூன்கடை உரிமையாளர் ஒருவர், தனக்கு மகள் பிறந்ததை இன்னும் வித்தியாசமாக கொண்டாடியுள்ளார்.3 கடைகளுக்கு உரிமையாளரான சல்மானுக்கு, டிசம்பர் 26ம் தேதி மகளை பெற்றெடுத்துள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த அவர், ஜனவரி 4ம் தேதி கடைக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக முடிதிருத்தம் செய்யப்படும் என கடையின் முன் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். அதில், எனக்கு மகள் பிறந்துள்ளது, அவளின் வருகையை கொண்டாடுவதற்காக இலவசமாக முடித்திருத்தம் செய்கிறோம் என அறிவிப்பும் செய்துள்ளார்.

இது குறித்து சல்மானிடம் கேட்டபோது, "மகன் பிறக்கும்போது அனைவரும் கொண்டாடி மகிழ்கிறார்களோ, அதைப்போலவே மகள் பிறக்கும்போதும் கொண்டாட வேண்டும். பிறப்பிலேயே பாகுபாடு காட்டக்கூடாது" எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், " என் மகள் பிறந்ததிலிருந்து நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மகிழ்ச்சியில் கூட ஆண், பெண் பாகுபாடு எப்படி இருக்கிறது என்பதை உலகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இதனை செய்தேன்" என்றார்.

சல்மானின் வித்தியமான சிந்தனை கடைக்கு வருகை தந்த வாடிக்கையாளர்களிடையேயும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஜனவரி 4ம் தேதி கடைக்கு சென்ற வாடிக்கையாளர்கள் அனைவரும் சல்மானின் மகளை மனதார வாழ்த்தியுள்ளனர். அத்துடன், குழந்தைகளிடையே பாகுபாடு காட்டக்கூடாது என்ற சல்மானின் யோசனையையும் பாராட்டி, அவரின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். வாடிக்கையாளர்களின் வருகை மற்றும் அவர்களின் ஆதரவு குறித்து பேசிய சல்மான், " அன்றயை நாள் 70 முதல் 80 வாடிக்கையாளர்கள் கடைக்கு வந்தனர். அவர்கள் அனைவருக்கும் இலவசமாக முடிதிருத்தம் செய்து கொடுத்தோம்.

வாடிக்கையாளர்கள் செல்லும்போது மகிழ்ச்சியாக சென்றனர். என் குழந்தையையும் மனதார வாழ்த்தினர்" என்றார். சல்மானை பற்றி பேசிய வாடிக்கையாளர் ஒருவர், "அவரின் நடவடிக்கை உண்மையிலேயே சமுதாயத்தில் நேர்மறையான சிந்தனையை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தை பிறப்பை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும்" என கேட்டுக்கொண்டார். சல்மானின் முயற்சிக்கு இணையத்திலும் பாராட்டு குவிந்துள்ளது. பெண் குழந்தை பிறப்பை கொண்டாடியதுடன், அதனை சமூக விழிப்புணர்வாக மாற்றிய சல்மானுக்கு மனதார வாழ்த்துகளை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

 
Published by:Tamilmalar Natarajan
First published: