Home /News /national /

கடனில் மூழ்கி கனவு இல்லத்தை விற்க முடிவெடுத்த நபருக்கு லாட்டரியில் கிடைத்த ரூ.1 கோடி.. கேரளாவில் சுவாரஸ்ய சம்பவம்

கடனில் மூழ்கி கனவு இல்லத்தை விற்க முடிவெடுத்த நபருக்கு லாட்டரியில் கிடைத்த ரூ.1 கோடி.. கேரளாவில் சுவாரஸ்ய சம்பவம்

கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் வசிக்கும் முகமது பாவா என்ற நபருக்குத் திங்கள் காலை லாட்டரில் இரு கோடி ரூபாய் பணம் கிடைத்துள்ளது.

கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் வசிக்கும் முகமது பாவா என்ற நபருக்குத் திங்கள் காலை லாட்டரில் இரு கோடி ரூபாய் பணம் கிடைத்துள்ளது.

கேரளா மாநிலத்தில் கடனை கழிக்க வீட்டை விற்கப்போகிறதுக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னாள் லாட்டரில் ஒரு கோடி விழுந்தது.

கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் வசிக்கும் முகமது பாவா என்ற நபருக்குத் திங்கள் காலை லாட்டரில் ஒரு கோடி ரூபாய் பணம் கிடைத்துள்ளது. அவர் தனது கடன் தொல்லையிலிருந்து விடிவுப் பெற, கனவு இல்லத்தை 40 லட்சத்திற்கு விற்க இரண்டு மணி நேரமே இருத்த நிலையில் இந்த லாட்டரி பணம் விழுந்த தகவல் கிடைத்துள்ளது.

50 வயதான முகமது பாவா பெயிண்டராக வேலைசெய்து வருகிறார். இவருக்கு அன்னி என்ற மனைவியும் மொத்தம் 5 பிள்ளைகள் உள்ளனர். 4 மகள்கள் மற்றும் 1 பையன். 2 பெண்களுக்குத் திருமணம் மற்றும் வீடு கட்டியது என்ற நிலையில் கடனில் முழுகியுள்ளார். மேலும் அவரது மகனை கத்தாருக்கு வேலைக்காக அனுப்பியதிற்கும் செலவு செய்துள்ளார்.

Also Read:என்னையும் சாதாரண மனிதன் போல் மதியுங்கள் - வித்தியாச முயற்சியால் வேதனைப்படும் இளைஞர்

அவர் ரூ.45 லட்சம் வங்கியிலும் மேலும் உறவினர்களிடமும் கடன் வைத்துள்ளார். சொந்த வீட்டை விற்றுவிட்டு கடனை அடைத்து 2 பள்ளி செல்லும் குழந்தைகளுடன் வாடகை வீட்டுக்குச் செல்ல தயாராகியுள்ளார். கட்டி 8 மாதமே ஆன 2000 சதுர அடி கனவு இல்லத்தை விற்க முன் தொகையும் வாங்கியுள்ளார்.

முகமது பாவா பல நாட்களாகவே லாட்டரி சீட்டு வாங்கி வந்துள்ளார். என்றாவது ஒரு நாள் பணம் அடிக்காத என்ற ஏக்கத்திலிருந்துள்ளார். ஆனால் அது நடந்ததே இல்லை. அவரும் அவரின் குடும்பமும் கடனை திரும்பிக் கட்ட முடியாமல் உடலளவிலும் மனதளவிலும் பெரும் கஷ்டத்தை அனுபவித்து வந்துள்ளனர்.

Also Read:’சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ நடிகை லட்சுமி ப்ரியாவின் மாடர்ன் போட்டோஸ்

இந்த நிலையில் திடீரென சரியான நேரத்தில் அடித்தது அதிர்ஷ்டம். அவரது கனவு வீட்டை விற்க இரண்டு மணிநேரமே இருந்த நிலையில் 1 கோடி ரூபாய் லாட்டரி கிடைத்துள்ளது.

40 லட்சத்திற்கு வீட்டை விற்க இருந்த நிலையில் 1 கோடிக்கு லாட்டரி அடித்தது அவருக்கும் அவர் குடுப்பதினர்க்கும் மகிழ்ச்சியாக உள்ளது. 1 கோடி பணத்தில் வரி போக அவருக்கு 63 லட்சம் கையில் கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Published by:Janvi
First published:

Tags: Kerala, Lottery, Rented house

அடுத்த செய்தி