உயிருடன் இருக்கும் பத்திரிகையாளர் போட்டோவைக் காட்டி மேற்கு வங்க வன்முறையில் கொல்லப்பட்டதாகக் கோரிய கொடுமை

பாஜக செய்தியாளர்கல் கூட்டத்தில் காட்டப்பட்ட புகைப்படத்தில் உள்ளவர் பத்திரிகையாளர்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமை திரிணாமூல் காங்கிர்ஸ் கட்சி சட்டமன்றத் தேர்தலில் வாகை சூடியதையடுத்து அங்கு மூண்ட வன்முறையில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

 • Share this:
  பாஜகவினரைக் குறிவைத்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குவதாக பாஜக கடும் குற்றச்சாட்டை எழுப்பியது. வன்முறையைக் கட்டுப்படுத்த மத்திய உள்துறையிடமிருந்து மேற்கு வங்க அரசுக்கு எச்சரிக்கையும் வந்தது, பாஜகவினர் சிலர் மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கையையும் முன் வைத்தனர்.

  இந்நிலையில், மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன, மே மாதம் 5ம் தேதி மேற்கு வங்க பாஜக செய்தியாளர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, தேசியப் பொதுச்செயலர் கைலாஷ் விஜய் வார்க்யா, பாஜக மேற்கு வங்கத் தலைவர் திலிப் கோஷ், செய்தித் தொடர்பாளர் ஸ்வபன் தாஸ்குப்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

  இதில் காட்டப்பட்ட வீடியோவில் பாஜக தொண்டர்கள் வன்முறையில் தாக்கப்பட்டதான விவரம் காட்டப்பட்டது. அப்போது ஒரு புகைப்படம் காட்டப்பட்டது, அதில் உள்ளவர் பெயர் மணிக் மொய்த்ரா, இவர் சிதால்குச்சியில் வன்முறைக்கு இரையானதாகக் காட்டப்பட்டது.

  செய்தியாளர்கள் சந்திப்பில் காட்டப்பட்ட வீடியோவை 10 லட்சம் பேர் பார்த்திருந்தனர். செய்தியாளர் சந்திப்பில் காட்டப்பட்ட இந்த வீடியோ பிறகு மேற்கு வங்க பாஜக முகநூல் பக்கத்திலும் பகிரப்பட்டது. பிற்பாடு இது அகற்றப்பட்டது வேறு கதை.

  இது நடந்தது மே 5ம் தேதி, ஆனால் மே 6ம் தேதி பிரபல ஆங்கில ஊடகத்தின் நிருபர் அப்ரோ பானர்ஜி, பாஜக வெளியிட்ட வீடியோவில் வெளியான போட்டோவை எடுத்துப் போட்டு அந்தப் புகைப்படத்தில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது என்னைத்தான், ஆனால், “நான் அப்ரோ பானர்ஜி, சிதால்குச்சியிலிருந்து 1300 கிமீ தொலைவில் நான் மிகவும் ஆரோக்கியமாக உயிருடன் இருந்து வருகிறேன். பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு என்னை மணிக் மொய்த்ரா என்று குறிப்பிட்டு சிதால்குச்சியில் கொல்லப்பட்டதாகக் காட்டியுள்ளனர். தயவு செய்து இந்தப் போலி போஸ்ட்டை நம்ப வேண்டாம். யாரும் கவலைப்பட வேண்டாம். நான் மீண்டும் கூறுகிறேன், நான் உயிருடன் தான் இருக்கிறேன்” என்று பதிவிட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  இது தொடர்பாக பத்திரிகை நிருபர் அப்ரோ பானர்ஜி ஊடகம் ஒன்றிடம் தெரிவிக்கும் போது, “நான் 6ம் தேதி காலை சற்று தாமதமாக எழுந்தேன். போனைத் திறந்தால் 100 மிஸ்டு கால்கள். அப்போது என் நண்பன் அரவிந்த் நடந்ததைக் கூறினான். மணிக் மொய்த்ரா படத்துக்குப் பதிலாக பாஜக ஐடி பிரிவு என் படத்தைப் போட்டதை கூறினான்” என்றார்.

  வன்முறையில் கொல்லப்பட்ட 9 பாஜகவினர் பெயரை பாஜக வெளியிட்டது அதில் கூறப்பட்ட பெயர் மொமிக் மைத்ரா, மணிக் மொய்த்ரா அல்ல. ஆனால் இந்தப் பெயருடன் தொடர்புடைய பெயர் கொண்ட ஒரு நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியானது. கொல்லப்பட்ட நபரின் பெயர் குழப்பம் தீர்ந்ததா இல்லையா என்பது தெரியவில்லை.
  Published by:Muthukumar
  First published: