முகப்பு /செய்தி /இந்தியா / நள்ளிரவில் நகைக் கடைக்குள் புகுந்து நெக்லஸ் திருடிய எலி..

நள்ளிரவில் நகைக் கடைக்குள் புகுந்து நெக்லஸ் திருடிய எலி..

நெக்லஸ் திருடிய எலி

நெக்லஸ் திருடிய எலி

கேரளாவில் நகைக்கடைக்குள் எலி ஒன்று நெக்லஸ் திருடும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kerala, India

கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள நகைக் கடையில் தங்க நெக்லஸ் ஒன்று திடீரென மாயமானது. இந்த நெக்லஸ் டப்பாவில் வைக்கமால், விற்பனைக்காக ஷோக் கேஸ்ஸில் ஓப்பனாக வைக்கப்பட்டிருந்த நகையாகும்.

நகையை காணவில்லை என்றதும் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் நிர்வாகத்திடம் தகவலை தெரிவித்தனர். மர்ம நபர்கள் கைவரிசை காட்டிருக்க கூடும் என்ற சந்தேகத்தில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் கடையின் நிர்வாகம் ஆய்வு செய்து பார்த்தது. அதில்தான் நகையை எடுத்து சென்று ஏதோ ஒரு மர்ம நபர் அல்ல, அது ஒரு எலியின் கைவரிசை என்று தெரியவந்தது.

நள்ளிரவு நேரத்தில் கடையின் சீலிங் வழியாக உள்ளே புகுந்த எலி அந்த தங்க நெக்லஸை லாவகமாக தூக்கிக்கொண்டு ஓடியுள்ளது. இதை பார்த்ததும் நகைக்கடைக்கார்கள் செய்வதறியாது திகைத்து போனார்கள். எலி நெக்லஸை திருடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இப்படி ஒரு திருடனை நீங்கள் இதுவரை பார்த்திருக்க மாட்டீர்கள் என பலரும் ஜாலியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

First published:

Tags: Jewelry shop, Theft, Viral Video