இந்தியாவின் ‘முதல் பெண்கள் பீர்’ அறிமுகம்...! அது என்ன ‘பெண்கள் பீர்’ எனக் கேட்கிறீர்களா?

Web Desk | news18
Updated: July 19, 2019, 7:31 PM IST
இந்தியாவின் ‘முதல் பெண்கள் பீர்’ அறிமுகம்...! அது என்ன ‘பெண்கள் பீர்’ எனக் கேட்கிறீர்களா?
பீர் விளம்பரம்
Web Desk | news18
Updated: July 19, 2019, 7:31 PM IST
ஹரியானா மாநிலத்தில் உள்ள ’பப்’ ஒன்றில் ”இந்தியாவின் முதல் பெண்கள் பீர்” என்ற அடைமொழியுடன் பீர் ரகம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.

பீரில் கூட ஆண் பீர்...பெண் பீர் என இருக்கிறதா? என கேள்விகள் எழ, விளக்கம் அளித்துள்ளது அந்த பப். குருகிராம் பகுதியில் அர்டார் 29 என்ற அந்த ‘பப்’தான் இந்த பீரை அறிமுகம் செய்துள்ளது. ”பொதுவாக பீரின் கசப்பு சுவையை பெண்கள் பலரும் விரும்புவதில்லை. இதனால்தான் பீரின் சுவையில் ஒரு புது மாறுதலைச் செய்து பெண்களுக்கான முதல் பீர் என அறிமுகப்படுத்தியுள்ளோம்” என்கிறது பப் நிர்வாகம்.

மேலும் நிர்வாகத்தினர் கொடுத்துள்ள விளக்கத்தில், “முதலில் சம்மர் பீர் என்றுதான் இந்த மாற்றுச்சுவை உள்ள பீரை அறிமுகம் செய்தோம். ஆனால், வாடிக்கையாளர்களாலே ‘பெண்கள் பீர்’ என்ற பெயர் வழக்கத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த பீர் மிகவும் இனிப்பானதாக இருப்பதாலே இதை இவ்வாறு அழைக்கின்றனர். பெண்களும் இனிமையானவர்கள்தானே” என்று தெரிவித்துள்ளனர்.


இந்த பீர் குறித்த விவரம் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமாகவே, பெண்ணுக்கு அர்த்தம், பெண் சுதந்திரம், காலமாற்றம் ஆகிய தலைப்புகளில் வழக்கம்போல் விவாதங்களும் விமர்சனங்களும் எழாமல் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: இன்ஸ்டாகிராமில் ‘ஹேக்கிங் பக்’... கண்டறிந்த தமிழருக்கு 20 லட்சம் ரூபாய் பரிசு!
First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...